Breaking

Tuesday, August 01, 2023

"முன்னாள் கல்வி அலுவலருக்கு சிறை" - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

"முன்னாள் கல்வி அலுவலருக்கு சிறை" - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத காரணத்தால், முன்னாள் கல்வி அலுவலருக்கு 2 வாரம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத சிவகங்கை மாவட்ட முன்னாள் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்திக்கு கண்டனம் தெரிவித்ததோடு, 2 வாரம் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டது. மாவட்ட கல்வி அலுவலருக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தண்டனையை நிறுத்தி வைக்க கோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற நீதிபதி, இரண்டு வாரத்திற்கு தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog