பிளஸ் 1 மாணவர்களுக்கு செப்.23-இல் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு
சென்னை, ஆக. 2: தமிழக அரசுப் பள்ளிகளில் நிகழாண்டு பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு செப்.23-ஆம் தேதி 'தமிழ் நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நடைபெறும் என அர சுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசுப் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 1 பயிலும் மாணவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க லாம். இத்தேர்வில் மொத்தம் 1,000 மாணவர்கள் (நடைமுறை யில் உள்ள இட ஒதுக்கீடு வகையை பின்பற்றி 500 மாணவர் கள், 500 மாணவிகள்) தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உத வித் தொகையாக ஓர் கல்வியாண்டுக்கு ரூ.10 ஆயிரம் (மாதம் ரூ.1,000 வீதம் பத்து மாதங்களுக்கு மட்டும்) இளநிலை பட்டப் படிப்பு வரை வழங்கப்படும்.
பாடத் திட்டம் என்ன?: தமிழக அரசின் 9, 10 -ஆம் வகுப் புகளில் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடநூ லில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் இரு தாள்களாக இத்தேர்வு நடத்தப்படும். முதல் தாள் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், இரண்டாம் தாள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை யிலும் நடைபெறும். ஆக.7 முதல் விண்ணப்பம்: செப்.23-ஆம் தேதி நடைபெ றவுள்ள இந்தத் தேர்வுக்கு நிகழ் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு பயிலும் மாணவர் கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.
மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆக.7 முதல் 18-ஆம் தேதி வரை பதி விறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகையாக ரூ.50 சேர்த்து மாணவர் பயி லும் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறி வுறுத்தப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப் பிக்க கடைசி நாள் ஆக.18 -ஆம் தேதியாகும் என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.