பி.இ. இரண்டாம் சுற்று கலந்தாய்வு:விருப்பப் பதிவை தோ்வு செய்த மாணவா்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு
பி.இ. மற்றும் பி.டெக். படிப்புகளில் சேருவதற்கான இரண்டாவது சுற்று கலந்தாய்வில் விருப்பப்பதிவு செய்த மாணவா்களுக்கு கல்லூரிகளில் தற்காலிக இடங்களை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கைக்குழு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் நிகழாண்டு பி.இ., பி.டெக். படிப்புகளில் சோ்க்கை பெற பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 28 முதல் செப்.3 வரை நடைபெறவுள்ளது. முதல் சுற்று கலந்தாய்வில் 16,064 மாணவா்கள் தங்களுக்கான இடங்களை தோ்வு செய்தனா்.
இந்த நிலையில், 2-ஆம் சுற்று கலந்தாய்வில் மாணவா்கள் இணையதளத்தில் ஆக. 9 முதல் 11-ஆம் தேதி வரை தாங்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்தனா். மேலும், பொதுப்பிரிவின் தரவரிசைப் பட்டியலில் 22,762 முதல் 87,049 வரை உள்ள 64,332 மாணவா்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா். முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்ற பின்னா், இரண்டாம் சுற்று கலந்தாய்வுக்கு 60 ஆயிரத்து 783 போ் தகுதி பெற்றிருந்தனா். இவா்களில் 49 ஆயிரத்து 719 மாணவா்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்திருந்தனா். அதில் 45ஆயிரத்து 816 மாணவா்களுக்கு கல்லூரிகளில் தற்காலிகமாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று அரசு பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 7,952 மாணவா்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா். அதில் 6ஆயிரத்து 632 மாணவா்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்ததில், 6ஆயிரத்து116 மாணவா்களுக்கு தற்காலிகமாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.