Breaking

Friday, July 21, 2023

மகளிர் உரிமை தொகை சந்தேகங்களுக்கு கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் அறிவிப்பு

Notification of Control Room Phone Numbers for Women Entitlement Amount Doubts - மகளிர் உரிமை தொகை சந்தேகங்களுக்கு கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் அறிவிப்பு: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களை தீர்த்து வைக்கும் வகையில், கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளன. இந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பங்கள் பெற, சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கு ரேஷன் கடைகள், அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், இ-சேவை மையங்கள், வாக்குச்சாவடி மையங்கள், சமுதாய கூடங்கள் உள்ளிட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்தவற்கான முகாம்கள் நடைபெறும் இடங்கள் பற்றி அறியவும், விண்ணப்பங்கள் தொடர்பான சந்தேகங்களை பூர்த்தி செய்ய ஏதுவாகவும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் துவக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog