கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இதுவரை விண்ணப்பித்துள்ள மாணவர்கள் எண்ணிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 23, 2023

Comments:0

கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இதுவரை விண்ணப்பித்துள்ள மாணவர்கள் எண்ணிக்கை

Number-of-students-applied-so-far-in-veterinary-colleges


தமிழகம் முழுவதும் உள்ள ஏழு கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இதுவரை மாணவர் சேர்க்கைக்கு 16,794 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கே.என். செல்வகுமார் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஏழு கால்நடை மருத்துவக் கல்லூரிகள், மூன்று கால்நடை உணவுத்துறை  சார்ந்த இதர மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன.

நிகழாண்டிற்கான மாணவர் சேர்க்கை இணைய வழியில் கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது.

வரும் 30 ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். 

கடந்த 10 நாள்களில் இளநிலை கால்நடை மருத்துவ படிப்பு, கால்நடை உணவுத்துறை சார்ந்த படிப்புக்கு மொத்தமாக 16,794 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

நிகழாண்டில் புதிய மருத்துவ படிப்புகளோ, புதிய கல்லூரிகளோ தொடங்கப்படவில்லை

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84694595