தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்
நாளை திங்கட்கிழமை (29-05-2023) அற வழியில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்..!! கலைஞரின் கனவு திட்டத்தை நிறைவேற்றுங்கள்.
சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் (2010 அறிமுகம் செய்யப்பட்ட கணினி அறிவியல் தனிப்பாடம் கானல் நீராகும் அவலம்.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 6-10 வகுப்புகளில் 2010-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாபெரும் கல்வித்திட்டம் தற்போதைய திமுக ஆட்சியில் மீண்டும் புத்துயிர் பெறுமா??
"பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியர்" என்ற வாசகம் வெறும் வரிகளில் மட்டுமே உள்ளது. அது சாத்தியமாவது எப்போது?
கணினி அறிவியல் என்ற தனிப்பாடத்தை 6 முதல் 18-ஆம் வகுப்பு வரை ஆறாவது கட்டாயப் பாடமாக அறிவிக்கக்கோரி...
கணினி பயிற்றுநர் என்ற நிலையை மாற்றி முதுநிலை கணினி ஆசிரியர் PR Assi என பணிவிதி & பணி வரன் முறையை மாற்றியமைக்கக் கோரியும்..
இடம்: DPI வளாகம், சென்னை நாள்: 29-05-2023 (திங்கட்கிழமை) நேரம்: காலை 9.00 மணி முதல்...
அனைத்து மாவட்டத்திலும் உள்ள பி.எட், முடித்த கணினி பட்டதாரிகள் அனைவரும் கட்டாயம் கலந்து கொண்டு அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் புத்துயிர் பெற்றிட வாரீர்
சும்மா காமெடி பண்ணாதீங்க... கேட்டா கொடுக்கற government இப்ப இல்ல. யார்னா அமைச்சர் இல்லனா கல்வி துறை இயக்குனர் வந்து ஆட்டத்தை கலைச்சு விடுவாங்க நீங்களும் நம்பி கலைஞ்சு போவீங்க... முடிஞ்சா பார்லிமென்ட் எலெக்ஷன்ல பழி வாங்குங்க பாக்கலாம் 😄😄😄
ReplyDelete