TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
கடந்த 2022ம் ஆண்டு இறுதியில் அறிவிப்பு வெளியிடப்பட்ட குரூப் 1 தேர்வுக்கான காலிப்பணியிடங்களுக்கான முதன்மை தேர்வுக்கு முன்னரான சான்றிதழ் பதிவேற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சான்றிதழ் பதிவேற்றம்:
தமிழக அரசின் குடிமைப்பணிகளுக்கான குரூப் 1 தேர்வின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அறிவிப்பின் படி, அப்பதவிகளுக்கு மொத்தம் 92 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
அதன்படி, முதல்நிலை தேர்வு நவம்பர் 19, 2022 அன்று நடத்தப்பட்டு, அதற்கான முடிவுகள் ஏப்ரல் 28ம் தேதி வெளியானது. இரண்டாம் கட்ட முதன்மை தேர்வு வரும் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்க உள்ளது. இத்தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்களின் அசல் சான்றிதல்களை TNPSC இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் ஐசேவை மையத்தின் மூலம் மே 8ம் தேதி முதல் 16 ம் தேதி மாலை 5:45 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும், தேர்வுக்கான கட்டணம் ரூ.200 ஐ மே 15ம் தேதிக்குள் அல்லது அதற்கு முன்னதாக சென்று சேரும் படி செலுத்தியிருக்க வேண்டும். தேர்வுக்கட்டணம் செலுத்தியவர்கள் சான்றிதழ் மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும்.
இதனை தொடர்ந்து சரியான நேரத்திற்குள் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்படாத தேர்வர்களுக்கு முதன்மை தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை என்று கருத்தில் கொள்ளப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.