Breaking

Saturday, May 27, 2023

அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - ஜூன் 5 முதல் விண்ணப்பிக்கலாம்

அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஜூன் 5 முதல் விண்ணப்பிக்கலாம் - Admission to Government Teacher Training Schools – Apply from 5th June

தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் 29, அரசு இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 9, அரசு அங்கீகாரம் பெற்ற அரசு உதவி பெறும் தனியார் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் 43 இயங்கி வருகின்றன.

2023-24ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடக்க இருக்கிறது.

மேற்கண்ட ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் ஜூன் 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய இயலாதோர் தங்கள் பகுதியின் அருகில் உள்ள ஏதேனும் ஒரு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் பதிவேற்றம் செய்யலாம்.

இதுகுறித்து கூடுதல் விவரம் வேண்டுவோர் http://scert.tnschools.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog