நில அளவர், வரைவாளர் பதவிக்கு 23ம் தேதி 2ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
நில அளவர், வரைவாளர் பதவிக்கு வரும் 23ம் தேதி 2ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார்.
சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அலுவலகத்தில் கலந்தாய்வு நடக்க உள்ளது. அழைப்பாணையை www.tnpsc.gov.inலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ் மற்றும் இமெயில் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டு விதிகள் விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல், காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர்.
எனவே, அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. விண்ணப்பதாரர்கள் மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வர தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.