ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் காலமானார். நவம்பர் 2020ல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிறகு அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ, கோவிட்-19 காரணமாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று உயிரிழந்தார். அமைச்சர் மஹ்தோவின் மரணத்தை உறுதி செய்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், “ எங்கள் புலி ஜகர்நாத் இப்போது இல்லை! இன்று ஜார்கண்ட் அதன் சிறந்த போராட்டக்காரர், கொள்கைவாதி, கடின உழைப்பாளி மற்றும் பிரபலமான தலைவர்களில் ஒருவரை இழந்துவிட்டது. மதிப்பிற்குரிய ஜகர்நாத் மஹ்தோ ஜி சென்னையில் சிகிச்சையின் போது காலமானார். அவரின் மரணம் ஈடு செய்யமுடியாத இழப்பு. அவரின் ஆத்மா சாந்தியடையவும், இக்கட்டான நேரத்தில் துயரத்தைத் தாங்கும் சக்தியைக் குடும்பத்தாருக்கு இறைவன் வழங்கவும் வேண்டிக்கொள்கிறேன்" என்று ட்வீட் செய்துள்ளார்.
கிரிதியில் உள்ள டும்ரி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவான மஹ்தோ, கடந்த மாதம் மாநில பட்ஜெட் கூட்டத்தொடரின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த அவர் இன்று காலையில் காலமானார்.
Search This Blog
Thursday, April 06, 2023
Comments:0
Home
Unlabelled
கல்வி அமைச்சர் திடீர் மரணம்: சென்னை மருத்துவமனையில் உயிர் பிரிந்தது!!
கல்வி அமைச்சர் திடீர் மரணம்: சென்னை மருத்துவமனையில் உயிர் பிரிந்தது!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.