Breaking

Saturday, March 11, 2023

பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள் தேர்வெழுதும் நேரத்தில் மின்தடை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முன்னேற்பாடுகள் செய்ய மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 12-ம் வகுப்புக்கு மார்ச் 13-ம் தேதி, 11-ம் வகுப்புக்கு மார்ச் 14-ம் தேதி, 10-ம் வகுப்புக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்வுகள் தொடக்க உள்ளது. இந்நிலையில், மாணவர்கள் தேர்வு மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதும் போது மின்தடை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு தேவையான உத்தரவுகளையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் நடைபெறும் போது தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மின்சார துறை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிற நிலையில், மாணவர்கள் தேர்வெழுதும் நேரத்தில் மின்தடை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முன்னேற்பாடுகள் செய்ய மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்வு நேரங்களில் வீடுகளிலும் தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog