அரசுப் பள்ளிகளுக்கு ஒரு நாள் ஊதியம் நன்கொடை: தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள்!
“நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” (நம்ம ஊர் பள்ளி) திட்டத்திற்கு தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு நாள் ஊதியத்தை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” (நம்ம ஊர் பள்ளி) திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட அரசுடன் மக்களும் கைகோர்க்க வேண்டும் என்றும், இதற்கு தேவையான நிதியை வழங்கிடக் கோரியும் கோரிக்கை விடுத்தார். முதல்வர் ஸ்டாலினும் ரூபாய் 5 இலட்சத்திற்கான காசோலையினை நன்கொடையாக வழங்கினார்.
இந்தக் கோரிக்கைகயை ஏற்று, பல்வேறு அமைப்பினர் நிதி உதவி வழங்கி வருகின்றனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தினை “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” (நம்ம ஊர் பள்ளி) திட்டத்திற்காக வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 200-க்கும் அதிகமான ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது மார்ச் மாத ஊதியத்தில் இருந்து ஒருநாள் ஊதியத்தை இந்த திட்டத்திற்காக வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.