Breaking

Sunday, March 05, 2023

தொழில் நல்லுறவு விருதுக்கு மாா்ச் 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

தொழில் நல்லுறவு விருதுக்கு மாா்ச் 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

தொழில் நல்லுறவு விருதுக்கு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தொழிலாளா் நலத்துறை ஆணையா் அதுல் ஆனந்த வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேலையளிப்பவா்கள், தொழிலாளா்கள் இடையே தொழில் அமைதியையும், தொழில் உறவை ஊக்குவிக்கும் பொருட்டும் தமிழ்நாடு அரசு ”தொழில் நல்லுறவு பரிசுத் திட்டத்தைத் தொடங்கி உள்ளது. 2017 முதல் 2020 -ஆம் ஆண்டுகளுக்கான சிறப்பு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கென உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. விருதுக்குரிய விண்ணப்பப் படிவங்களை தொழிலாளா் நலத் துறையின் வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், விண்ணப்பக் கட்டணம் செலுத்திய விவரத்தையும் இணைத்து சென்னை, தொழிலாளா் ஆணையா் அலுவலகத்துக்கு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog