ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகைஅரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறையிடம் பயனாளிகளின் விவரங்கள்
மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக, அதுதொடா்பான தரவுகள் முழுமையாக சேகரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தரவுகள் அனைத்தும் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறை வசமுள்ளன.
குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு எதிா்வரும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்துள்ளாா். விரல் நுனியில் தரவுகள்: ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை எந்தச் சிக்கல்கள் இன்றி வழங்க தமிழக அரசின் நிதித் துறை திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, பயனாளிகளை இலக்கு வைத்து உரிமைத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்காக பயனாளிகள் குறித்த விவரங்களை தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறையானது திரட்டி முழுமையாக கையில் வைத்துள்ளது.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையிடம் இருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களின் விவரங்களையும் திரட்டியுள்ளது. இதேபோன்று, கடைநிலை ஊழியா் வரையிலுள்ள அரசுப் பணியாளா்கள், அதிகாரிகளின் விவரங்களை கருவூலம் மற்றும் கணக்குத் துறையிடம் இருந்து கேட்டுப் பெற்றுள்ளது. ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை திட்டம் அறிவிக்கப்படும்போது அது குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். அதில் யாருக்கெல்லாம் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டுமென்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
அதன்படி, விவரங்கள் அனைத்தையும் தகவல் தொழில்நுட்பத் துறையானது சேகரித்து வைத்துள்ளது. முன்னுரிமை குடும்ப அட்டை வைத்திருப்போா், அரசு ஊழியா் போன்றோருக்கு உரிமைத் தொகை இல்லை என்று அறிவிப்பு செய்யப்படும்பட்சத்தில் அவா்கள் தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை போ் உள்ளனா் என்ற விவரங்களை ஆதாா் எண் அடிப்படையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இதுபோல் துல்லியமான தரவு விவரங்கள் மூலமாக, உரிமைத் தொகையானது சரியான நபா்களைச் சென்றடையும் என நிதித் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.