Breaking

Monday, March 06, 2023

NEET - இளநிலை நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

NEET - இளநிலை நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித் தனியே நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று நாடு முழுவது நடைபெற்றது.

இந்த நிலையில், 2023-ம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வுக்கு இன்று (மார்ச் 6) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வர்கள் தேசிய தேர்வு முகமையின் (https://neet.nta.nic.in/) இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளங்கலை படிப்புக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog