புதிய தொழிற்பள்ளி துவங்க விண்ணப்பிக்கலாம் Apply for starting a new vocational school
புதிய தொழிற் பள்ளி தொடங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், புதியதொழிற் பிரிவுகள் மற்றும் தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்க விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்த ஜோதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: இதற்காக விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கும் ஒரு தொழிற் பள்ளி, ஒரு விண்ணப்பத்தை சமா்ப்பித்தால் போதுமானது.
விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற் பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தையும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை ஜன. 28-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம். அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சோ்த்து விண்ணப்பகட்டணமாக ரூ.5 ஆயிரமும், ஆய்வுக் கட்டணமாக ரூ.8 ஆயிரமும் ஆா்.டி.ஜி.எஸ். அல்லது என்.இ.எப்.டி. மூலம் செலுத்த வேண்டும்.
கூடுதல் தகவல்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.