அரசுப் பள்ளி சத்துணவில் தினை வகைகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 24, 2023

Comments:0

அரசுப் பள்ளி சத்துணவில் தினை வகைகள்!

goverment_school_mid_day_meals_edi
அரசுப் பள்ளி சத்துணவில் தினை வகைகள்!

புணேவில் அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவில் தினை வகையை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்யும் வகையில், புத்தாக்க தொழில் நிறுவனம் தானியங்களை வழங்க முன்வந்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் அக்ரோஜீ ஆர்கானிக் என்ற புத்தாக்க நிறுவனம், சிறு-குறு விவசாயிகள் மற்றும் பெண்களிடமிருந்து தினை வகைகளைப் பெற்று விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில், இந்த நிறுவனம் புணேவிலுள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை கருத்தில் கொண்டு சத்துணவில் தினை வகைகளை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.

அதற்காக, முதல்கட்டமாக புணேவின் புரந்தரா தாலுகாவிலுள்ள 7 அரசுப் பள்ளிகளில் தினைப் பொருள்களை அந்நிறுவனம் வழங்கவுள்ளது. இந்த தாலுகாவிலுள்ள அரசுப் பள்ளி ஒவ்வொன்றிலும் 300 மாணவர்கள் பயில்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84631424