பழங்குடியின அரசு பள்ளியில் ஓவியங்கள்: பட்டாம்பூச்சி குழு ஏற்பாடு
பெ.நா.பாளையம் : ஆனைகட்டி அருகே உள்ள பனப்பள்ளி அரசு துவக்க பள்ளியில் பட்டாம்பூச்சி குழுவினர் சுவர் ஓவியங்களை வரைந்தனர்.
ஆனைகட்டி அருகே பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், பனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. மலை நடுவே யானைகள் நடமாட்டம் மிகுந்துள்ள இப்பள்ளிக்கு செல்ல, பேருந்து வசதிகள் இல்லை. இப்பள்ளியில், தற்போது, 20 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியை எல்.எம்.டபிள்யூ., ஜி.கே.டி., அறக்கட்டளை மாணவர்கள் அமர்ந்து படிக்க 'டைல்ஸ்' ஒட்டி கொடுத்து, பள்ளி சுவருக்கு வண்ணம் அடித்து கொடுத்து, பணிகளை செய்து, பராமரித்து வருகின்றனர். இந்த அறக்கட்டளையின் அழைப்பின் பேரில், பட்டாம்பூச்சி குழு சார்பில், பள்ளி சுவரில் நல் ஒழுக்கங்களை வளர்க்கும் கருத்துக்கள் அடங்கிய ஓவியங்களை வரையும் பணி மேற்கொள்ளப்பட்டது. பட்டாம்பூச்சி குழு ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் குமார், அரசு பள்ளி ஆசிரியர்கள் கார்த்திகேயன், ராஜ் கிருஷ்ணன், அரிகிருஷ்ணன், சுரேஷ்குமார், கார்த்தி, செந்தில்குமார் ஆகியோர் இணைந்து பள்ளி தலைமை ஆசிரியர் லதா ஒத்துழைப்புடன் பள்ளியின் சுவர்களில் ஓவியம் வரைந்தனர். பள்ளி சுவர்களில் தொடர்வண்டி, சாலை பாதுகாப்பு குறியீடுகள், விளையாட்டின் வகைகள் சார்ந்த படங்கள், மாணவர்களுக்கு பிடித்தமான கார்ட்டூன் பொம்மைகள் வரையப்பட்டன. வகுப்பின் உள்ளே மாணவர்கள் எளிதில் படங்களை பார்த்து பாட கருத்துக்களை புரிந்து கொள்ளும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டன.
ஓவியங்களை, மாணவர்களும், பெற்றோர்களும் பார்த்து பட்டாம்பூச்சி குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.