போராட்டம் வாபஸ் இல்லை: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு
'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி, வரும் 5ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள போராட்டம், வாபஸ் பெறப்படவில்லை. திட்டமிட்டபடி மாநிலம் முழுதும் நடக்கும்' என, 'ஜாக்டோ - ஜியோ' அறிவித்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 5ம் தேதி, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ கடந்த வாரம் அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பு வந்த பின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கூட்டமைப்பில் உள்ள சில சங்க நிர்வாகிகள், நேற்று முதல்வரை சந்திக்க அழைக்கப்பட்டனர்.
அதன்படி, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, அகவிலைப்படி உயர்வுக்கு நன்றி தெரிவித்தனர். இதையடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்படும் என்ற தகவல் பரவியது.
இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள், நேற்று சென்னையில் அவசரமாக கூடி ஆலோசித்தனர்.
அதன்பின், 'போராட்டத்துக்கும், அரசின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்கும் தொடர்பில்லை. திட்டமிட்டபடி 5ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக பொதுச் செயலர் பெருமாள்சாமி கூறுகையில், ''வரும், 5ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதைத் தொடர்ந்து, உயர்மட்டக் குழு, வரும் 8ம் தேதி மதுரையில் கூடி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யும்,'' என்றார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.