பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இமெயில் கட்டாயம்! அரசு உத்தரவின் அசர வைக்கும் பின்னணி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 07, 2023

Comments:0

பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இமெயில் கட்டாயம்! அரசு உத்தரவின் அசர வைக்கும் பின்னணி

பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இ-மெயில் முகவரி கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும் எனவும், இந்த பணிகளை ஜனவரி 9 முதல் 12ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை சார்பில் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறையின் இந்த உத்தரவின் பின்னணியில் மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையிலான முக்கிய விஷயம் உள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்டது.

அதன்படி மார்ச் மாதம் 13 தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு துவங்கி நடைபெற உள்ளது. இந்த தேர்வு ஏப்ரல் மாதம் 3ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. முன்னதாக அடுத்த மாதம் செய்முறைத்தேர்வுகள் துவங்கி நடைபெற உள்ளது. பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான செய்முறை மற்றும் எழுத்து தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 8.8 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். மொத்தம் 3,169 தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி https://dge1.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்து அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்து வருகின்றன.

இந்நிலையில் தான் பள்ளி கல்வித்துறை சார்பில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிளஸ் 2 மாணவர்களுக்கு இ-மெயில் கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. உயர்கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் உரிய தகவல்களை பெற வேண்டும் என்பதற்கான இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவ-மாணவிகளுக்கு இ-மெயில் உருவாக்கி வழங்கும் பணியை ஜனவரி மாதம் 9ம் தேதி முதல் 12ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews