TET - ஆசிரியர் தகுதி தேர்வில் 14 சதவீதம் பாஸ் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கலாம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 23, 2022

Comments:0

TET - ஆசிரியர் தகுதி தேர்வில் 14 சதவீதம் பாஸ் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கலாம்!

TET - ஆசிரியர் தகுதி தேர்வில் 14 சதவீதம் பாஸ் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கலாம்!

ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வின் முதல் தாளில், 14 சதவீதம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், தேர்ச்சி சான்றிதழை இணையதளத்தில் பதிவிறக்கலாம் எனவும், டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், ஆசிரியர் தகுதிக்கான முதலாவது தேர்வு தாளுக்கான கணினி வழித் தேர்வுகள், இந்த ஆண்டு, அக்.,14 முதல், 19 வரை நடத்தப்பட்டது.

இதில், 1.53 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வின் முடிவுகள், இம்மாதம் 7ம் தேதி வெளியானது; 21 ஆயிரத்து, 543 பேர் தேர்ச்சி பெற்றுஉள்ளனர்.

தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழை, டி.ஆர்.பி.,யின், http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில், மூன்று மாதம் வரை பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய, ஏற்கனவே அவகாசம் வழங்கப்பட்டது. எனவே, தற்போது திருத்தம் செய்வதற்கான கோரிக்கையின் மீது, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாளுக்கு, 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது. இதில், 60 சதவீதமான, 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால், தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவர்.

இட ஒதுக்கீட்டு பிரிவினர் மற்றும் மாற்று திறனாளிகள், 55 சதவீதமான, 82க்கு அதிகமாக மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி பெற்றவராக கருதப்படுவார்.

இந்தத் தேர்வில், ஒரு முறை தேர்ச்சி பெறுவோர், ஆயுள் முழுதும் தேர்ச்சி சான்றிதழை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு கால வரையறை கிடையாது.

இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியில் சேர, அரசு நடத்தும் போட்டி தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கான அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிடும்போது, கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews