Breaking

Sunday, December 25, 2022

JEE நுழைவுத் தோ்வு விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிட விலக்கு: அன்புமணி வரவேற்பு

ஜேஇஇ நுழைவுத் தோ்வு விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிட விலக்கு: அன்புமணி வரவேற்பு

ஜேஇஇ நுழைவுத் தோ்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் தமிழக மாணவா்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிட விலக்கு அளிக்கப்பட்டிருப்பதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ஜேஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத்தோ்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், தமிழக பாடத்திட்ட மாணவா்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தேசிய தோ்வு முகமையின் இந்த நடவடிக்கை நிம்மதியளிக்கிறது; வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் 2020-21-இல் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு நடத்தப்படாததால் மதிப்பெண் வழங்கப்படவில்லை. ஆனால், பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் குறிப்பிடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்ததால் தமிழக மாணவா்களால் ஜேஇஇ தோ்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை.

தமிழக மாணவா்களின் இந்த சிக்கல் குறித்து நான் தான் தமிழக அரசின் கவனத்துக்கும் தேசிய தோ்வு முகமையின் கவனத்துக்கும் கொண்டு சென்றேன். மாநிலங்களவையிலும் இதை சுட்டிக்காட்டி தமிழக மாணவா்களுக்கு விலக்களிக்க வேண்டும் என்று கோரியிருந்தேன். அதையேற்று தமிழக மாநில பாடத் திட்ட மாணவா்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழக மாணவா்கள் அதிக எண்ணிக்கையில் ஜேஇஇ நுழைவுத் தோ்வை எழுதி வெற்றி பெற வாழ்த்துகள் என்று கூறியுள்ளாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog