ரூ.62,000 சம்பளத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் ஓட்டுநர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 28, 2022

Comments:0

ரூ.62,000 சம்பளத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் ஓட்டுநர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

ரூ.62,000 சம்பளத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் ஓட்டுநர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

மயிலாடுதுறை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ந.க.ண்: 800/ 2022/ ஊ.வ.2

பணி: ஈப்பு ஓட்டுநர்

காலியிடங்கள்: 5

வயதுவரம்பு: 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

www.mayiladuthurai.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சான்றொப்பம் செய்து அதனுடன் ரூ.30 அஞ்சல் வில்லை ஓட்டப்பட்ட சுய முகவரியுடன் கூடிய அஞ்சல் உறை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம்(வளர்ச்சி பிரிவு), ஊராட்சி ஒன்றிய அலுவலகம், முதல்தளம், மயிலாடுதுறை - 609 001

மேலும் விவரங்கள் அறிய https://mayiladuthurai.nic.in/notice_category/recruitment/ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews