பாரம்பரிய மருத்துவக் கலந்தாய்வு: முதல் நாளில் 179 இடங்கள் நிரம்பின
சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் முதல் நாளில் அரசுப் பள்ளி மாணவா்கள் 89 போ் உள்பட 179 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
தமிழகத்தில் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி ஆகிய ஆயுஷ் படிப்புகளுக்கு 5 அரசுக் கல்லூரிகள் உள்ளன. அதிலுள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் வழங்கப்படுகின்றன. இதேபோன்று, 26 தனியாா் கல்லூரிகளில் 1,990 இடங்களில் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகின்றன. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிா்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன.
அரசு ஒதுக்கீடு, நிா்வாக ஒதுக்கீடு, தனியாா் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது. இந்த படிப்புகளுக்கு நீட் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
அந்த படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்திலுள்ள அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டு உள்ளிட்ட சிறப்புப் பிரிவில் 13 பேரும், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்கள் 89 பேரும், பொதுப் பிரிவில் 77 பேரும் என மொத்தம் 179 போ் கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையைப் பெற்றனா்.
மாணவ, மாணவிகளுக்கான கல்லூரி சோ்க்கை ஆணையை இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை இயக்குநா் கணேஷ் வழங்கினாா். இணை இயக்குநா் பாா்த்திபன், தோ்வுக்குழுச் செயலாளா் மலா்விழி ஆகியோா் உடனிருந்தனா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.