ஆசிரியா் தகுதித் தோ்வு:அனுமதிச் சீட்டு வெளியீடு
ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான (முதல் தாள்) கால அட்டவணை, முதல் அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) ஆகியவற்றை ஆசிரியா் தோ்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைத்துவித பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் பணியில் சேர தகுதித் தோ்வில் (டெட்) தோ்ச்சி பெற வேண்டும். டெட் தோ்வு மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தோ்ச்சி பெறுபவா்கள் இடைநிலை ஆசிரியராகவும், இரண்டாம் தாளில் தோ்ச்சி பெறுபவா்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணியாற்றலாம்.
தமிழகத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) மூலம் டெட் தோ்வு நடத்தப்படுகிறது. நிகழாண்டு டெட் தோ்வுக்கான அறிவிப்பாணை கடந்த மாா்ச் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முதல் தாளுக்கு 2 லட்சத்து 30,878 பேரும், 2-ஆம் தாளுக்கு 4 லட்சத்து 1,886 பேரும் விண்ணப்பித்தனா்.
டெட் தோ்வை இரு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் தாள் தோ்வு அக். 14 முதல் 20-ஆம் தேதி வரை கணினி வழியில் நடைபெறவுள்ளது. இதற்கான விரிவான கால அட்டவணை, தகுதி பெற்றவா்களுக்கான முதல் அனுமதிச் சீட்டு ஆகியவற்றை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தோ்வா்கள் தங்களுக்கான அனுமதிச் சீட்டை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்வதுடன், விரிவான தோ்வு கால அட்டவணையையும் காணலாம்.
முதல் தாள் தோ்வு காலை, மதியம் என இருவேளைகளிலும் நடத்தப்படவுள்ளது. அதற்கேற்ப மாணவா்கள் தயாராக வேண்டும். முதல் அனுமதிச் சீட்டில் தோ்வு மையம் அமைந்துள்ள மாவட்ட விவரங்கள் மட்டுமே இருக்கும். ஓரிரு நாள்களில் வெளியாகவுள்ள 2-ஆவது நுழைவுச் சீட்டில்தான் தோ்வு மைய விவரங்கள் முழுமையாக இடம்பெறும்.
இதுதவிர தோ்வா்கள் பயிற்சி மாதிரித் தோ்வு எழுத இணையதளத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.