TNPSC - தொழில் ஆலோசகர் பணிக்கு ஆக.26-க்குள் விண்ணப்பிக்கலாம்!
தொழில் ஆலோசகர், சமூக அலுவலர் பதவிகளில் உள்ள 16 காலி பணியிடங்களுக்காக நடத்தப்படும் தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் மாதம் 26-ம்தேதி கடைசி நாள் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழில் ஆலோசகர் (மருத்துவக் கல்வித் துறை), சமூக அலுவலர் (தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) பணியிடங்களில் 16 காலியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தின் வாயிலாக ஆகஸ்ட் 26-ம் தேதிக்குள் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு வயது வரம்பு இல்லை. ஆனால்,விண்ணப்பதாரர்கள் சம்மந்தப்பட்ட துறையில் முதுகலைப் பட்டம்பெற்றிருக்க வேண்டும்.
கணினி வழித் தேர்வு
சமூக அலுவலர் பதவிக்கு நவம்பர் 12-ம் தேதி காலை மற்றும் பிற்பகலிலும், தொழில் ஆலோசகர் பதவிக்கு நவம்பர் 13-ம் தேதி பிற்பகலிலும் கணினி வழித் தேர்வுகள் நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் இணையவழி மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தை திருத்தம் செய்துகொள்ள ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 3-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.