TNEA கவுன்சலிங்; தமிழகத்தில் உள்ள டாப் பொறியியல் கல்லூரிகளின் கட் ஆஃப் இதுதான்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 22, 2022

Comments:0

TNEA கவுன்சலிங்; தமிழகத்தில் உள்ள டாப் பொறியியல் கல்லூரிகளின் கட் ஆஃப் இதுதான்!

TNEA Engineering counseling cut off for top colleges in Tamilnadu: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இந்த நிலையில், டாப் மோஸ்ட் கல்லூரிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு என்பதை இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் பொதுப்பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 25 ஆம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 25,26,27 ஆகிய மூன்று தேதிகள் சாய்ஸ் ஃபில்லிங் எனப்படும் கல்லூரிகளை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்ய அவகாசம் வழங்கப்படும்.

இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள டாப் இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களை கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் சென்னை மற்றும் கோவையில் உள்ள டாப் கல்லூரிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் இடம்பெற்றுள்ளன. இது குறித்த விவரங்களை இப்போது பார்ப்போம்.

கடந்த ஆண்டுகளில் கல்லூரியின் தரம், மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு அளிக்கும் முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த கட் ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழக அளவில் முதலிடத்தில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகம் முதல் பல்வேறு டாப் பொறியியல் கல்லூரிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த வீடியோவில் ஒவ்வொரு கல்லூரிக்கும், ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும், ஒவ்வொரு இனப்பிரிவுக்கும் தனித் தனியாக கட் ஆஃப் வெளியிடப்பட்டுள்ளது.

கட் ஆஃப் 200க்கு 200 வைத்திருக்கும் பெரும்பாலான மாணவர்களின் முதல் விருப்பமாக கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு உள்ளது. கிண்டி பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்குத் தான் அதிகமான கட் ஆஃப் உள்ளது. மேலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகள் உள்ள கல்லூரிகளிலும், அந்த படிப்புக்கே கட் ஆஃப் அதிகமாக உள்ளது.

ஒட்டுமொத்தமாக பார்க்கையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கு மாணவர்களிடையே அதிக ஆர்வம் இருக்கிறது. இதற்கு அடுத்தப்படியாக ஐ.டி மற்றும் இ.சி.இ, சிவில் போன்ற படிப்புகள் உள்ளன. அதேநேரம் தமிழ் வழி கல்விக்கு மாணவர்களிடையே ஆர்வம் குறைவாக இருக்கிறது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசு 20% இடஓதுக்கீடு வழங்கியுள்ள நிலையிலும், அண்ணா பல்கலைக்கழக வளாகங்களிலே அதற்கான ஆர்வம் குறைவாக இருந்து வருகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews