தர நிர்ணய கழகத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை! - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.08.2022 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 19, 2022

Comments:0

தர நிர்ணய கழகத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை! - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.08.2022

Jobs-for-engineering-graduates-in-grading-institute---Last-Date-to-Apply-26.08.2022
விண்ணப்பித்துவிட்டீர்களா..? தர நிர்ணய கழகத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை!

புதுதில்லியில் செயல்பட்டு வரும் தர நிர்ணய கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Scientist-‘B’

பணி: Agriculture Engineering - 02

பணி: Bio-Medical Engineering - 02

பணி: Chemistry - 04

பணி: Computer Engineering - 02

பணி: Electrical Engineering - 04

பணி: Environment Engineering - 02

சம்பளம்: மாதம் ரூ.99,969

வயதுவரம்பு: 26.08.2022 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: வேதியியல் பாடப்பிரிவில் முதல் வகுப்பில் எம்.எஸ்சி பட்டம் பெற்று GATE-2020,2021,2022 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதர பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருப்பதுடன் GATE-2020,2021,2022 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: GATE தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் குறித்த விவரம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bis.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.08.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.bis.gov.in/wp-content/uploads/2022/08/1-Detailed-Advetisement-English-29-07-22.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84670447