இன்ஜி., கவுன்சிலிங் அட்டவணை அறிவிப்பு 7 நாளில் கல்லூரியில் சேர புதிய கட்டுப்பாடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 20, 2022

Comments:0

இன்ஜி., கவுன்சிலிங் அட்டவணை அறிவிப்பு 7 நாளில் கல்லூரியில் சேர புதிய கட்டுப்பாடு

இன்ஜினியரிங் பொது மற்றும் தொழிற்கல்வி கவுன்சிலிங், 25ல் துவங்குகிறது. இதற்கான 'ஆன்லைன்' விருப்பப் பதிவு உள்ளிட்ட கால அட்டவணை மற்றும் நிபந்தனைகள் வெளியிடப்பட்டு உள்ளன.

1.56 லட்சம் பேர்

கவுன்சிலிங், நான்கு சுற்றுகளாக நடக்கிறது. இதில், 1.49 லட்சம் இடங்களுக்கு, 1.56 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். சிறப்புப் பிரிவு ஒதுக்கீட்டில் தகுதி பெற்றவர்களும், பொது கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும்.

* கவுன்சிலிங் அட்டவணைப்படி, சம்பந்தப்பட்ட 'கட் ஆப்' மதிப்பெண் மற்றும் தர வரிசை பெற்றவர்கள், அதற்கான தேதியில், தங்களுக்கு விருப்பமான கல்லுாரிகள் மற்றும் பாடப் பிரிவுகளை, 'சாய்ஸ் பில்லிங்' முறையில், பதிவு செய்ய வேண்டும்

* மாணவர்கள் பதிவு செய்த முன்னுரிமை வரிசை, காலியிடங்கள் மற்றும் தரவரிசையின் அடிப்படையில் கல்லுாரிகள் ஒதுக்கப்படும். ஒதுக்கப்பட்ட கல்லுாரியை ஏற்பதற்கான அவகாசத்துக்குள், உறுதி செய்ய வேண்டும்

கட்டாயம் சேர வேண்டும்

*உறுதி செய்தவர்களுக்கு மட்டும், இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். பின், ஏழு நாட்களுக்குள் ஒதுக்கீடு கிடைத்த கல்லுாரிகளில், கட்டாயம் சேர வேண்டும். சேராவிட்டால், அடுத்த சுற்று மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத ஒதுக்கீடு பெறும் மாணவர்களுக்கும் இந்த நிபந்தனை பொருந்தும்

ஆன்லைனில் மட்டுமே

* ஏதாவது சந்தேகங்கள் இருந்தால், அருகில் உள்ள கவுன்சிலிங் உதவி மையத்தை அணுகலாம். மேலும், www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோக்களையும் பார்க்கலாம்

* எந்த மாணவரும் சென்னை கவுன்சிலிங் மையத்துக்கு வர வேண்டியதில்லை. அனைத்து பணிகளையும் தங்கள் வீட்டில் இருந்தோ அல்லது கவுன்சிலிங் உதவி மையங்களில் இருந்தோ, ஆன்லைனில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

கவுன்சிலிங் கால அட்டவணை

கவுன்சிலிங் கட் ஆப் மதிப்பெண் தரவரிசை விருப்ப பதிவு தேதி தற்காலிக ஒதுக்கீடு உறுதிப்படுத்தும் தேதி

முதல் சுற்று 200 முதல் 184.505 வரை ஒன்று முதல் 14,524 வரை ஆக., 25 முதல் 27 வரை ஆக., 28 ஆக., 29

இரண்டாம் சுற்று 184.500 முதல் 163 வரை 14,525 முதல் 45,577 வரை செப்., 9 முதல் 11 வரை செப்., 12 செப்., 13

மூன்றாம் சுற்று 162.995 முதல் 130.250 வரை 45,578 முதல் 94,620 வரை செப்., 23 முதல் 25 வரை செப்., 26 செப்., 27

நான்காம் சுற்று 130 முதல் 77.500 வரை 94,621 முதல் 1,56,278 வரை அக்., 9 முதல் 11 வரை அக்., 12 அக்., 13

தொழிற்கல்வி 200 முதல் 80.500 வரை ஒன்று முதல் 1,879 வரை அக்., 25 முதல் 27 வரை அக்., 28 அக்., 29

தொழிற்கல்வி 7.5 சதவீதம் 200 முதல் 80.500 வரை ஒன்று முதல் 488 வரை அக்., 25 முதல் 27 வரை அக்., 28 அக்., 29

ஒரே தேதியில் 2 கவுன்சிலிங்

அரசு பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவர்களுக்கான, 7.5 சதவீத ஒதுக்கீடு பெறும் மாணவர்களுக்கும், பொது கவுன்சிலிங்கின் போதே, நான்கு சுற்றுகளாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

7.5 சதவீதத்துக்கான தரவரிசையில், முதல் சுற்றில், ஒன்று முதல் 332வது ரேங்க்; இரண்டாம் சுற்றில், 333 முதல் 2,407வது ரேங்க்.மூன்றாம் சுற்றில், 2,408 முதல் 7,733வது ரேங்க் மற்றும் 7,734வது ரேங்க் முதல், 22 ஆயிரத்து, 99வது ரேங்க் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்களுக்கு, அதே சுற்றிலேயே பொது கவுன்சிலிங்கும் சேர்ந்து நடக்கும்.

அவர்களுக்கான ஆன்லைன் பக்கத்தில், 'சாய்ஸ் பில்லிங்' வசதியில், அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீடுக்கும், பொது கவுன்சிலிங்குக்கான இட ஒதுக்கீடுக்கும், தனித்தனியாக இரண்டு விருப்ப பதிவு பட்டியல் காட்டப்படும்.இரண்டு பட்டியலிலும், மாணவர்கள் தங்களுக்கான கல்லுாரிகளை வரிசைப்படுத்தலாம். இரண்டு பட்டியலிலும் மாணவர்களின் முன்னுரிமை வரிசை அடிப்படையில், தனித்தனியே இரண்டு வித ஒதுக்கீடுகள் வழங்கப்படும்.

அவற்றில், எந்த ஒதுக்கீட்டு கல்லுாரியில் மாணவர் சேர விரும்புகிறாரோ, அந்த கல்லுாரியில், ஒரு வாரத்துக்குள் சேர வேண்டும். அவர் சேராமல் விடும் இடம் காலியானதாக கருதப்பட்டு, அடுத்த சுற்று கவுன்சிலிங்கில் சேர்க்கப்படும். அதேபோல், இரண்டிலும் சேராமல் தவற விட்டால், மீண்டும் அடுத்த சுற்றில் பங்கேற்க முடியாது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews