பொய்யான தகவல்களை தேர்வர்கள்‌ நம்ப வேண்டாம்‌ -டிஎன்பிஎஸ்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 01, 2022

Comments:0

பொய்யான தகவல்களை தேர்வர்கள்‌ நம்ப வேண்டாம்‌ -டிஎன்பிஎஸ்சி

குரூப் I தேர்வு தொடர்பாக முகநூல் பக்கத்தில் தவறான செய்திகள் வெளியிட்ட நபர் மீது சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

முன்னதாக, குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. 3104 பேர் முதன்மைத் தேர்வில் கலந்து கொண்ட நிலையில், மதிப்பெண்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் பிற விதிகளின் அடிப்படையில் 137 பேர் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த தேர்வு பட்டியல் தற்காலிகமானது என்றும் நேர்காணலின் போது, தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள், தங்கள் அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்ததது.

இதற்கிடையே, குரூப் – I தேர்வு தொடர்பாக முகநூல் பக்கத்தில் தவறான செய்திகள் வெளியிட்டது தொடர்பாக சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து,வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;

’’தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ குரூப் 1-ல் அடங்கிய பதவிகளுக்காக 04.03.2022, 05.03.2022 மற்றும்‌ 06.03.2022 அன்று நடைபெற்ற முதன்மை தேர்வில்‌ தேர்ச்சி பெற்று, 13.07.2022 முதல்‌ 15.07.2022 வரை நடைபெற உள்ள நேர்முகத்‌ தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட தெரிவாளர்களின்‌ பட்டியல்‌ 29.06.2022 அன்று தேர்வாணைய வலைதளத்தில்‌ வெளியிடப்பட்டது.

இதன் தொடர்பாக, முகநூல்‌ பக்கத்தில்‌ தேர்வாணையத்தின்‌ செயல்பாடுகளுக்கு அவதூறு ஏற்படுத்தும்‌ வகையில்‌ பொய்யான தகவல்கள்‌ பதிவிடப்பட்டுள்ளது. இவ்வினம்‌ குறித்து தொடர்புடைய நபர்‌ மீது பொய்யான தகவலை பதிவிட்டமைக்காக சைபர்‌ கிரைமில்‌ தேர்வாணையத்தால்‌ புகார்‌ அளிக்கப்பட்டுள்ளது எனத்‌ தெரிவிக்கப்படுகிறது இதுபோன்ற பொய்யான தகவல்களை தேர்வர்கள்‌ நம்ப வேண்டாம்‌ என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது’’.

இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews