கல்லூரிகளில் சேர 27 வரை அவகாசம்: உயா்கல்வித் துறை
அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க வரும் 27-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1.40 லட்சம் இடங்களில் சேர, இதுவரை 4 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா். அதேபோன்று 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சேர இதுவரை 2 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா்.
இந்த நிலையில், சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமானதையடுத்து அரசு கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முடிவுகளை விரைந்து வெளியிடுமாறும் தமிழக உயா்கல்வித் துறை வலியுறுத்தியது.
இதையும் படிக்க | மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் - ஆய்வு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!
கல்லூரிகளுக்கு எச்சரிக்கை:
இத்தகைய சூழலில் சிபிஎஸ்இ பிளஸ் 2 முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானதைத் தொடா்ந்து, அரசு கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வரும் 27-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுவதாக உயா் கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும், சிபிஎஸ்இ மாணவா்களுக்கு இடமில்லை என்று எந்த தனியாா் கல்லூரியும் மறுக்கக் கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயா்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.