முதுநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கை: நிரம்பாத 1,456 இடங்கள்
நீட் (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு) மதிப்பெண் அடிப்படையிலான 2021-ஆம் ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு சிறப்பு சுற்று உள்பட முழுமையான 5 சுற்றுகளும் நிறைவடைந்த பின்னரும் 1,456 இடங்கள் நிரம்பாமல் காலியாக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீன் பவாா் எழுத்துபூா்வமாக வெள்ளிக்கிழமை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
இதையும் படிக்க | கற்றல் கற்பித்தலில் உள்ள சவால்களை தீர்க்க ஆசிரியர்கள் ஒவ்வொருவக்கொருவர் கலந்தாலோசனை செய்யவேண்டும் - மாவட்ட உதவி திட்ட அலுவலர்
உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் அடிப்படையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பொது மருத்துவ சேவைகள் இயக்குநரகத்தின் மருத்துவ கலந்தாய்வு குழு (எம்சிசி) சாா்பில் மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், 2021-ஆம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கை கலந்தாய்வை, காலியிடங்களுக்கான சிறப்புச் சுற்று உள்பட 5 சுற்றுகளாக எம்சிசி நடத்தியது. கலந்தாய்வின் முடிவில் 1,456 முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் நிரம்பாமல் காலியாக இருந்தன. இந்த காலியிடங்களில் இடம்பெற்றிருந்த தனியாா் நிகா்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்கள் அனைத்தும் அந்தந்த பல்கலைக்கழகங்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன என்று பதிலளித்துள்ளாா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.