Breaking

Monday, June 13, 2022

பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

'பள்ளிச்சூழல் தான் கற்கும் திறனையும், அறிவாற்றலையும் மேன்மைப்படுத்தும். இடையில் தடைபட்ட வாய்ப்பை, இப்போது அதிகம் பயன்படுத்த வேண்டும்' என, மாணவ - மாணவியருக்கு, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன். கொரோனா என்ற பெருந்தொற்றால், பள்ளிக்கு நேரில் வந்து பயிலும் முறை தடைபட்டது.

இருந்தாலும், 'ஆன்லைன்' வழியே கல்வி கற்றீர்கள்.ஆனாலும், பள்ளியில் அமர்ந்து கற்கும் அனுபவத்துக்கு இணையானது ஏதுமில்லை. பள்ளிச்சூழலே கற்கும் திறனையும், அறிவாற்றலையும் மேன்மைப்படுத்தும். இடையில் தடைபட்ட வாய்ப்பை, மாணவ - மாணவியர், இப்போது அதிகமாக பயன்படுத்த வேண்டும்.அதேபோல் ஆசிரிய பெருமக்களுக்கும் வாழ்த்துகள். மிக நீண்ட இடைவெளிக்குப் பின், பள்ளிகளை நோக்கிப் பிள்ளைகள் வருகின்றனர்.

அவர்களை கனிவுடன் வரவேற்று, அரவணைப்புடன் பாடங்களை கற்பிக்க வேண்டும்.தடைபட்ட கல்வியை தாராளமாக வழங்கி, முழுமைப்படுத்த வேண்டிய முழுப் பொறுப்பும், உங்கள் கைகளில் தான் இருக்கிறது. கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும்; மாநிலம் பயன் பெறட்டும்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog