மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. பச்சைக்கொடி காட்டியது பள்ளிக் கல்வித்துறை..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 02, 2022

Comments:0

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. பச்சைக்கொடி காட்டியது பள்ளிக் கல்வித்துறை..!

In Tamil Nadu, the Plus-2 general election started on May 5 and ended on May 28. Similarly, the Class 10 general examination started on May 6 and ended on May 30. The Class 11 general examination began on May 9 and ended on May 31.

Following this, the work of editing the 10th and 12th class general examination answer sheets started from yesterday. The work of editing the answer sheets of the 11th class general examination begins on the 9th.

In this regard, the school education department has issued some instructions to the teachers involved in the task of editing the answer sheet.

Accordingly, teachers should not be rude in editing 10th, 11th and 12th class general examination answer sheets. The Department of Education has advised students to give full marks if they have given partial answers.

With this, it is expected that the number of students failing will be very low. The school education department has given the green light to the teachers to give generous marks which has caused joy among the students.

Class 10 results will be released on June 17, Class 11 results will be released on July 7 and Class 12 results will be released on June 23.
தமிழகத்தில், பிளஸ்-2 பொதுத்தேர்வு மே 5-ம் தேதி தொடங்கி மே 28-ம் தேதி முடிவடைந்தது. அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6-ம் தேதி தொடங்கி மே 30-ம் தேதி முடிவடைந்தது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9-ம் தேதி தொடங்கி மே 31-ம் தேதி முடிவடைந்தது.

அதன் தொடர்ச்சியாக, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நேற்று முதல் தொடங்கியது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணி வருகிற 9-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதன்படி, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் ஆசிரியர்கள் கடுமை காட்டக்கூடாது. மாணவர்கள் ஓரளவு விடை அளித்து இருந்தால் முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதன் மூலம், தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தாராளமாக மதிப்பெண்கள் வழங்க ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பச்சைக்கொடி காட்டியுள்ளது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17-ம் தேதியும், 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7-ம் தேதியும்,12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23-ம் தேதியும் வெளியாகவுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews