Breaking

Friday, April 01, 2022

மாணவரைத் தாக்கியதாக ஆசிரியா் மீது புகாா்

மாணவரைத் தாக்கியதாக ஆசிரியா் மீது புகாா்

கோவையில் மாணவரைத் தாக்கியதாக ஆசிரியா் மீது புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுவன், தனியாா் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவரைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா் பிரம்பால் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் மாணவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இது குறித்து மாணவா் தனது பெற்றோரிடம் தெரிவித்தாா். இது தொடா்பாக சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் மாணவரின் தந்தை வியாழக்கிழமை புகாா் அளித்தாா். இதில், ‘பள்ளியில் மாணவா்களைத் துன்புறுத்தக்கூடாது என சட்டம் இருக்கிறது. ஆனால் ஆசிரியா் மாணவரைத் துன்புறுத்தி மிரட்டியிருக்கிறாா். எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என குறிப்பிட்டிருந்தாா். இதன்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog