வீட்டுக் கடன்களுக்கான வருமான வரி - இன்றுமுதல் முடிவுக்கு வருகிறது! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 01, 2022

Comments:0

வீட்டுக் கடன்களுக்கான வருமான வரி - இன்றுமுதல் முடிவுக்கு வருகிறது!

2019-20 மத்திய பட்ஜெட்டில், வீட்டு கடன் பெறுபவர்கள், ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் அளவுக்கு தங்களின் வருவாயில் இருந்து கழித்து, மீதம் உள்ள தொகைக்கு வருமான வரி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். இந்த சலுகை அதிகபட்சமாக 45 லட்சம் ரூபாய் மதிப்பு வரையிலான வீடுகளை வாங்குபவர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டது.

இதையும் படிக்க | Teachers

2019இல் கட்டுமானத் தொழிலை ஊக்குவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சலுகை, கொரோனா பாதிப்புகள் ஏற்பட்ட பின், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. ஆனால் 2022-23 பட்ஜெட்டில், இந்த சலுகை நீட்டிக்கப்படாததால், ஏப்ரல் ஒன்று முதல் புதிதாக வீட்டு கடன் பெறுபவர்களுக்கு இந்த சலுகை கிடைக்காது. அதே சமயத்தில், வீட்டு கடனுக்காக ஆண்டுக்கு 2 லட்சம் வரை வட்டி செலவை, வருவாயில் இருந்து கழித்துக் கொள்ளும் பழைய சட்டப் பிரிவு எப்போதும் போல தொடர்கிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews