நீட் தேர்வுக்கான கட்டணத்தை அதிகரித்தது தேசிய தேர்வு முகமை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 07, 2022

Comments:0

நீட் தேர்வுக்கான கட்டணத்தை அதிகரித்தது தேசிய தேர்வு முகமை

The National Examinations Agency has ordered an increase in the fees for the NEET examination for the current year.

This is what is being said: The National Examination Agency conducts an entrance examination for medical studies called NEED. It has raised the fees for the exams to be held this year. Accordingly, all sections have to pay Rs.100 more than last year. Fees for the general category range from Rs. 1,500 to Rs. Increased from 800 to 900.

In addition, a fee of Rs 8,500 has been fixed for all categories of expatriate Indians. The National Examinations Agency also said that the candidates have to pay the fees online and GST separately. நடப்பு ஆண்டிற்கான நீட் தேர்வுக்கான கட்டணத்தை அதிகரித்து உத்தரவிட்டு உள்ளது தேசிய தேர்வு முகமை.

இது குறித்து கூறப்படுவதாவது: மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் எனப்படும் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்தாண்டு நடைபெற உள்ள தேர்விற்கான கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இதன்படி அனைத்து பிரிவினரும் கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.100 -ஐ அதிகமாக கட்ட வேண்டும். பொது பிரிவினருக்கான கட்டணம் ரூ.1,500-ல் இருந்து ரூ.1,600 ஆகவும், இ.டபிள்யூ.எஸ், மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கான கட்டணம் ரூ.1,400-ல் இருந்து ரூ.1,500 ஆகவும், மாற்றுத்திறனாளிகள், தாழ்த்தப்பட்டோர், மூன்றாம் பாலினத்தவருக்கான கட்டணம் ரூ.800- ல் இருந்து 900 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைத்து பிரிவினருக்குமான கட்டணமாக ரூ.8,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன்வழி கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி., உள்ளிட்ட கட்டணங்களை தேர்வர்கள் தனியே செலுத்த வேண்டும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews