18 ஆண்டுகளாக பதநீர் விற்று பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் கிராமம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 04, 2022

Comments:0

18 ஆண்டுகளாக பதநீர் விற்று பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் கிராமம்

தூத்துக்குடி அருகே 18 ஆண்டுகள் பதநீர் விற்று பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கி வரும் கிராம மக்கள். பனைமரம் நிறைந்த அந்தோணியார்புரம் கிராமத்தில் உள்ள மக்கள் பதநீர் விற்று பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் காட்சி வியக்கவைத்துள்ளது.

பனைமரம் நிறைந்த அந்தோணியார்புரம் கிராமத்தில் அங்கு விற்பனை செய்யப்படும் பதநீருக்கு சுற்று வட்டார மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது .இந்நிலையில் அந்த கிராமத்தில் இயங்கி வரும் ஆர் சி நடுநிலைப் பள்ளியில் 7,8,9 ஆகிய வகுப்பு ஆசிரியர்களுக்கான சம்பளத்தை 18 ஆண்டுகளாக கிராம மக்களே இனைந்து பதனீர் விற்று அவர்களுக்கு வழங்கி வருகின்றனர். ஆண்டு தோறும் பதநீர் விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுத்து பள்ளியை நடத்தும் பொதுமக்கள். அதற்காக தனித்தனியாக பதநீர் விற்று வந்த கிராம மக்கள் கல்வி தேவைக்காக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். தமிழக அரசின் உதவியை எதிர்பாக்காமல் 18 ஆண்டுகளாக அந்தோனியார்புரம் கிராம மக்கள் பள்ளி நடந்தி வருவது சுற்றுவட்டார மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பள்ளி ஆசிரியர்களுகாண ஊதியத்தை அரசே ஏற்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தூத்துக்குடி அருகே 18 ஆண்டுகளாக கிராமக்கள் இணைந்து பதநீர் விற்று பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கி வரும் செயல் வியக்க வைத்துள்ளது. தூத்துக்குடி அருகே ஓரு கிராமமே சேர்ந்து பதநீர் விற்று, பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கி வருகிறது. பனைமரங்கள் நிறைந்த அந்தோணியார்புரம் கிராமத்தில் விற்பனை செய்யப்படும் பதநீருக்கு சுற்றுவட்டார மக்களிடையே நல்ல வரவேற்பு உண்டு. இந்த நிலையில் அந்த்ய கிராமத்தில் உள்ள ஆர்.சி. நடுநிலை பள்ளியில் 7,8,9 ஆகிய வகுப்பு ஆசிரியர்களுக்கான சம்பளத்தை 18 ஆண்டுகளாக கிராம மக்களே இணைந்து பதநீர் விற்று வழங்கி வருகின்றனர். ஆண்டுதோறும் பதநீர் விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாய்யை வைத்து ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுத்து பள்ளியை திறம்பட நடத்தி வருகின்றனர். அதற்காக தனித்தனியே பதநீர் விற்று வந்த கிராம மக்கள் கல்வி தேவைக்காக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். அரசின் உதவியை எதிர்பார்க்காமல் 18 ஆண்டுகளாக அந்தோணியார்புரம் கிராம மக்கள் பள்ளி நடத்தி வருவது சுற்றுவட்டார மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியத்தை அரசே ஏற்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள மற்ற கிராமங்களுக்கு எல்லாம் முன் உதாரணமாக திகழும் அந்தோணியார்புரத்தை சேர்ந்த மக்களுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews