குரூப் 4 தேர்வில் தமிழ் மொழியில் எத்தனை மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்?
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், பண்டக காப்பாளர் போன்ற பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், 7,301 காலி பணியிடங்களுக்கான குரூப் -4 போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை இரு நாள்களுக்கு முன்பு தேர்வாணையத் தலைவர் பாலசந்திரன் வெளியிட்டார். இதற்கான தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குரூப் 4 தேர்வுக்கான பணி வாரியான காலியிடங்கள் விவரம்:
மொத்த காலியிடங்கள்: 7301
1. கிராம நிர்வாக அலுவலர் - 274
2. இளநிலை உதவியாளர் - 3590 + 3
3. இளநிலை உதவியாளர்(பிணையம்) - 88
4. வரித் தண்டலர், நிலை-I - 50
5. தட்டச்சர் - 2089 + 39
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900
6 சுருக்கெழுக்கு தட்டச்சர் (நிலை-III) - 885 +39
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 75,900
7. பண்டகக் காப்பாளர் (தமிழக்ம் விருந்தினர் இல்லம் உதகமண்டலம்) - 01
சம்பளம்: மாதம் ரூ. 16,500 - 66,000
8. இளநிலை உதவியாளர்(தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) - 64
9. இளநிலை உதவியாளர்(தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்) - 30+4
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900
10. வரி தண்டலர் (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) - 49
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 60,800
11. சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை -III) (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்( - 07
சம்பளம்: மாதம் ரூ. 20.600 - 75,900
தகுதிகள்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டு தேர்விலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு: குரூப் 4 தேர்வில் தமிழ் மொழியில் 100 கேள்விகளும், பொது அறிவுப் பிரிவில் 100 கேள்விகள்என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.
தமிழில் 150 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அடுத்த தாள் மதிப்பிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.04.2022
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 24.07.2022.
தேர்வு காலம்: முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை.
தேர்வு முடிவுகள்: அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.