உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் பள்ளிகளில் அமைக்க உள்ளதால், 17ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதையும் படிக்க | ஏப்ரல் 26ம் தேதி முதல் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2ம் பருவ பொதுத்தேர்வு
இதற்கான அறிவிப்பு விரைவில் வர உள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடக்க உள்ளது. இதற்காக, தமிழகத்தில் 35 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
இந்த வாக்குச்சாவடிகள் பெரும்பாலும் அரசுப் பள்ளிகள், நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் அமைய உள்ளன. மேலும் வாக்கு எண்ணிக்கை கல்லூரிகளிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனால், பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணிகள் முன்கூட்டியே தொடங்க உள்ளன.
இதையும் படிக்க | மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
அதற்காக வாக்குச் சாவடிகளாக அறிவிக்கப்பட்ட பள்ளிகளில் வாக்குச்சாவடிக்கான ஏற்பாடுகள் செய்யும் பணி தொடங்கும் போது பள்ளிகளில் மாணவர்கள் இருந்தால் இடைஞ்சலாக இருக்கும் என கருதப்படுகிறது. எனவே, வாக்குப் பதிவு நடக்கும் 19ம் தேதிக்கு முன்னதாக பணிகளை தொடங்க உள்ளதால், பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அதனால் 17ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை கல்லூரிகளில் நடப்பதால், கல்லூரிகளுக்கும் முன்னதாக விடுமுறை அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிட பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.