அரசு உதவி பெறும் பள்ளிகளில், உபரியாக உள்ள ஆசிரியர்களுக்கு, அரசு பள்ளிகளில் இடமாறுதல் வழங்கப்படுகிறது.
தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் விருப்ப இடமாறுதல் வழங்கப்படும். அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதல்; முதுநிலை ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு; நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு; பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் உள்ளிட்ட மாறுதல்கள் முடிந்துள்ளன. தொடர்ந்து, ஒவ்வொரு பதவிக்கும், பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டு, பிப்., 23ல் அனைத்து நடவடிக்கைகளும் முடிகின்றன.இந்நிலையில், பணி நிரவல் என்ற நடவடிக்கையின் கீழ், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, அரசு பள்ளி ஆசிரியர்களாக இடமாறுதல் வழங்கப்படுகிறது.மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில், கூடுதலாக உள்ள ஆசிரியர்களுக்கு, அவரவர் பணியாற்றும் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளி காலியிடங்களில் இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடங்கள் காலியாக இருந்தால், அவற்றில் அரசு பள்ளி ஆசிரியர்களை மாறுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.மாணவர்கள் எண்ணிக்கை விகிதத்தை விட, அதிக ஆசிரியர்கள் இருக்கும் நிலையை மாற்ற, முதன் முதலாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.