‘பெண் சக்தி’ விருது: கல்வி நிறுவனங்களுக்கு ஜன.31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க UGC அறிவுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 24, 2022

Comments:0

‘பெண் சக்தி’ விருது: கல்வி நிறுவனங்களுக்கு ஜன.31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க UGC அறிவுறுத்தல்

‘பெண் சக்தி’ விருது: கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

சென்னை, ஜன. 22: பெண் சக்தி (நாரி சக்தி புரஸ்கார்) விருதுக்கான பரிந் துரைகளை உயர்கல்வி நிறுவனங்கள் ஜன.31-ஆம் தேதிக்குள் இணைய வழியில் பரிந்துரைக்க வேண்டும் என யுTC அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து யுஜிசி செயலர் ரஜனிஷ் ஜெயின் பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: சர் வதேச மகளிர் தினத்தை யொட்டி, பல்வேறு துறைகளில் சாதனை படைத்துவரும் பெண்களை அடையாளப்படுத்தும் வகையில் பெண் சக்தி ('நாரி சக்தி புரஸ்கார்') விருதை மத்திய பெண்கள் மற்றும் குழந்தை கள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆண்டுதோறும் வழங்கி வருகி றது. பெண்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக அதிகார மளித்தலில் சிறந்த பணிகளை இந்த விருதுகள் அங்கீகரிக்கின்றன. இந்த விருது சான்றிதழுடன், ரூ.2 லட்சம் ரொக்கமும் கொண்டது ஆகும். எனவே அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள், தங்க ளதுகல்வி நிறுவனங்களில் உள்ள தகுதியான நபர்களைத்தேர்வுசெய்து அவர்களுக்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகளை www.aw ards.gov.in என்ற வலைதள முகவரியில் ஜன.31-ஆம் தேதிக்குள் சமர்ப் பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பெண் சக்தி விருதுக்கான தகுதி மற்றும் பிற விவரங்கள் தொடர் பான வழிகாட்டுதல்கள் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுற்ற றிக்கையின் இணைப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பரிந்துரை யின்போது விருதுக்கான வழிகாட்டுதல்கள், விதிமுறைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.

இதையடுத்து விருதுக்கான பெறப்பட்ட விண்ணப்பங்கள், பரிந் துரைகளை மத்திய அரசின் தேர்வுக்குழுவினர் ஆய்வு செய்து இறுதி பட்டியலை வெளியிடுவர்.தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மார்ச் 8 ஆம் தேதி 'பெண் சக்தி' விருதுகள் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews