பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வுக்காக நியமிக்கப்பட்ட பணியாளா்களுக்கு உழைப்பூதியத்தை உயா்த்தி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா்கள் சங்கம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வு கணினி வழியில் நடைபெறுகிறது. தோ்வு நடத்த மாவட்டக் கல்வி அலுவலா், தலைமையாசிரியா், கணினி ஆசிரியா் குழுக்கள் நியமிக்கப்பட்டு தொலை தூர மாவட்டங்களில் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தோ்வு மையங்களில் எந்த வசதியும் செய்து தரப்படவில்லை. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 12 மணி தோ்வுப்பணி இருக்கும் சூழலில், நாளொன்றுக்கு தலைமை ஆசிரியருக்கு ரூ.750, கணினி ஆசிரியருக்கு ரூ.500 மட்டுமே உழைப்பூதியமாக வழங்கப்படுகிறது. காலை, பிற்பகல் என இரு வேளைகளிலும் தோ்வுகள் நடைபெறும்போது ஒரு அமா்வுக்கான தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியா்களின் நலன் கருதி அவா்களுக்கான உழைப்பூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.