2021-22ம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்த அரசாணை வெளியிடப்பட்ட பின் அலகு விட்டு அலகு மாறுதல் சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் - கல்வி அலுவலரின் செயல்முறைகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 18, 2021

Comments:0

2021-22ம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்த அரசாணை வெளியிடப்பட்ட பின் அலகு விட்டு அலகு மாறுதல் சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் - கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

நிர்வாகம் - கல்வி - கோயம்புத்தூர் மாநகராட்சி - கோவை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலகு விட்டு அலகு மாறுதல் கோரிய விண்ணப்பங்கள்மீது - பதில் வழங்குதல் - சார்பு.

பார்வை:

முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் கடித ஓ.மு. எண்.012591/83/2021 நாள்.10.11.2021- உடன் இணைக்கப்பட்ட கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து (மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்களிடமிருந்து நேரடியாக பெறப்பட்ட) 08.11.2021 நாளன்று பெறப்பட்ட மனு எண்.012595

பார்வையில் காண் கடிதத்தில் இணைக்கப்பட்டுள்ள மனுவில். கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக 39 தேர்ந்தெடுக்கப்பட்டு, பட்டதாரி / முதுகலை ஆசிரியர்களாக (பெரும்பாலும் பெண் ஆசிரியர்களாகவும்) பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளதாலும் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக கணவன் / மனைவி குழந்தைகள் மற்றும் வயதான உடல்நிலை இயலாத பெற்றோர்களை கவனிக்க இயலாததாலும் பல்வேறு மன அழுத்தங்களுக்கிடையே பணிபுரிந்து வருவதாலும் அவரவர் சொந்த மாவட்டத்திற்கு, அலகு விட்டு அலகு பணியிட மாறுதல் மற்றும் பொதுமாறுதலில் கலந்து கொள்ள அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர். 2021-2022-ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொதுமாறுதல் வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்த அரசாணை வெளியிடப்பட்டபின், அதனடிப்படையில் மனுதாரர்களுக்கு அலகு விட்டு அலகு மாறுதல் வழங்குதல் சார்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews