Breaking

Saturday, October 09, 2021

இரண்டாம் அலகு தேர்வு - CEO சுற்றறிக்கை!

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாவது அலகு தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பாடங்களை முடிக்கும் முன்னே தேர்வு அறிவித்துள்ளதால், மாணவர்களும், ஆசிரியர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கொரோனா பரவல் குறைந்ததால், பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் செப்., 1 முதல் மீண்டும் துவங்கின. ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வருகின்றனர். பள்ளிகளை திறந்ததும், 45 நாட்கள் வரை ஒருங்கிணைப்பு மற்றும் உளவியல் பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும், அவ்வப்போது பாடங்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதன்படி குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை மட்டும், ஆசிரியர்கள் நடத்தி வந்தனர். புத்துணர்வு பயிற்சியும் நடந்து வந்தது.இந்நிலையில், இரண்டாம் அலகு தேர்வை நடத்துமாறு, பள்ளிகளுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'வரும், 18 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இரண்டாம் அலகு தேர்வு நடத்த வேண்டும். அதற்கு பொது வினாத்தாள் வழங்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளது.இந்த தேர்வுக்கான பாடங்களின் விபரமும், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையால், ஆசிரியர்களும், மாணவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பள்ளிகளை திறந்த போது, 45 நாட்கள் புத்துணர்வு பயிற்சி அளிக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால், பள்ளிகளை திறந்து, 45 நாட்கள் கூட ஆகாத நிலையில், நடத்தாத பாடங்களுக்கும் சேர்த்து தேர்வு நடத்த சொல்வதால் குழப்பம் அடைந்து உள்ளனர். எனவே, பாடங்களை நடத்தி முடிக்கும் வகையில், தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று, கோரிக்கை விடுத்து உள்ளனர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog