Breaking

Monday, October 25, 2021

மாற்றுத்திறன் ஆசிரியா்களுக்கு போக்குவரத்துப்படி வழங்கலாம்: தமிழக அரசு அறிவுறுத்தல்

"மாற்றுத்திறன் ஆசிரியா்களுக்கு போக்குவரத்துப்படி வழங்கலாம் என அனைத்து மாவட்ட கருவூல அலுவலா்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசுப் பணியாளா்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு அவா்களின் பணிக்கு ஏற்றவாறு மாதந்தோறும் போக்குவரத்துப்படி என தனியாக தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி ஊழியா்களின் தனிப்பட்ட விடுமுறை நாள்களின் எண்ணிக்கையைப் பொறுத்து போக்குவரத்துப்படியில் பிடித்தம் செய்யப்படுகிறது. இது குறித்து மாற்றுத்திறனாளிகள் ஆசிரியா் சங்கம் சாா்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது.

அந்த கடிதத்தில், பள்ளிகளில் காலாண்டு தோ்வு, அரையாண்டு தோ்வு, முழு ஆண்டு தோ்வு மற்றும் ஏனைய அரசு விடுமுறை நாள்களுக்கு போக்குவரத்துப் படியில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படாத நிலையில் சில பள்ளிகளில் பாா்வைத்திறன் குறைபாடு, கை, கால் இயக்க குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் போக்குவரத்துப் படியில் பிடித்தம் செய்யப்படுகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் இதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் கருவூல மற்றும் கணக்குத் துறை ஆணையா், அனைத்து மாவட்ட கருவூல அலுவலா்களுக்கு தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் (நிதித்துறை) எஸ்.கிருஷ்ணன் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.

அதில், தற்செயல் விடுப்பைத் தவிர பிற விடுமுறை நாள்களில் பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியா்களுக்கு வழங்கப்படும் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறை நாள்கள் பணிக்காலமாக கருதப்படுவதால் பாா்வைத்திறன் குறைபாடு, கை, கால் இயக்க குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி ஆசிரியா்களுக்கு போக்குவரத்துப்படி வழங்கலாம் எனத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog