அரசு ஐடிஐயில் படிப்பு முடித்ததும் வேலை வாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 19, 2021

Comments:0

அரசு ஐடிஐயில் படிப்பு முடித்ததும் வேலை வாய்ப்பு

அக்.19: செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலை யத்தில் தொழிலாளர் நலன்திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் நேற்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அரசு ஐடிஐ யில் படிப்பு முடித்ததும், வேலை வாய்ப்பு அளிக் கப்படும் என உறுதியளித் தார்.

செங்கல்பட்டு அர சினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிலா ளர் நலன்திறன் மேம்பாட் டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் நேற்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அங்கு படிக் கும் மாணவர்களுடன் நேற்று கலந்துரையாடி னார். பின்னர், அங்கு என் னென்ன தொழில்பயிற்சி கள் அளிக்கப்படுகின்றன. மாணவர்களுக்கு, அரசின் சலுகைகள் முறையாக கிடைக்கிறதா, ஆசிரியர் கள் பற்றாக்குறை உள்ளதா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், படிப்பு முடித்தவுடன் மாணவர்களுக்கு அதற் கேற்ற வேலை வாய்ப்புகள் கிடைப்பதாக உறுதி செய்தார். நவீன தொழில் நுட்பத்துக்கு ஏற்றவாறு நவீன பயிற்ச்சி கருவிகள் வழங்குவதாகவும் மாண வர்களிடம் தெரிவித்தார்.

அவருடன் எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்கு நர் கே.வீராராகவ ராவ், கலெக்டர் ஆ.ர.ராகுல் நாத் அரசு தொழிற்பயிற்சி நிலைய துணைஇயக்குநர் விஜயமாலா ஆகியோர் இருந்தனர்.

ஸ்ரீபெரும் புதூர்: காஞ் சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், சுங்குவார்சத்திரம், இருங் காட்டுகோட்டை ஆகிய பகுதிகளில் சிப்காட் தொழில் பூங்கா அமைந் துள்ளது. தற்போது ஒரசு டம் பகுதியில், புதிதாக தொழிற்பயிற்சி மையம் அமைக்க, தமிழக அரசு திட்டமிட்டது. இதைதொடர்ந்து, ஸ்ரீபெரும்புதூர் அருகே, ஒரகடத்தில், கடந்த 2014ம் ஆண்டு 1.80 கோடியில் கட்டபட்ட திறன் மேம் பாட்டு மையம் செயல்ப டாமல் உள்ளது. இதனால், அந்த கட்டிடம் எதற்கும் பயன்படாமல் பாழானது. இதையடுத்து திறன் மேம்பாட்டு மைய கட்டிடம், அரசு தொழில் பயிற்சி நிலையமாக மாற்ற பட்டது.

மேலும், கம்பியர் மோட்டார் வாகனம், கம்பியர் மின்னணுவியல், இயந்திரம்மற்றும் மிண்ண னுவியல் தொழில்நுட்ப வியலாளர், வெல்டர். குளிர்பதனம் பராமரிப்பு, தொழில்நுட்ப உதவியாளர் என, 2 ஆண்டு பயிற்சி, வெல்டர் ஓராண்டு பயிற்சி என 5 தொழிற்பிரிவுகள், ஓரகடம் தொழில் நிலையத் தில்துவங்கப்பட்டுள்ளன. இதற்கான மாணவர் சேர் கையும் நடந்து முடிந்து, மாணவர்கள் தற்போது படித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், ஓரகடம் தொழில் பயிற்சி மையத்தில் நேற்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார். மேலும் மைய வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டுவைக் கப்பட்டன. அவருடன் காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி மாவட்ட கவுன்சி லர்படப்பை மனோகரன் ஆகியோர் இருந்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews