தஞ்சை மாவட்ட அரசு ஐடிஐ-ல் மாணவர்கள் நேரடி சேரக்கைக்கு விண்ணப்பிக்கலாம் - 30ம் தேதி கடைசி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 19, 2021

Comments:0

தஞ்சை மாவட்ட அரசு ஐடிஐ-ல் மாணவர்கள் நேரடி சேரக்கைக்கு விண்ணப்பிக்கலாம் - 30ம் தேதி கடைசி

தஞ்சாவூர் மாவட்ட அரசு ஐடிஐ- ல் மாணவ, மாணவிகள் நேரடி சேர்க்கைக்கு விண்ணப் பிக் கலாம் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில், 2021ம் ஆண்டில் தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள காலி யிடங்களுக்கு மாணவ, மாணவிகள் நேரடி சேர்க்கை வரும் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்க ளுக்கு உதவிடும் வகை யில் அரசு தொழிற்ப யிற்சி நிலையத்தில், சேர்க்கை உதவி மையம்; அமைக்கப்பட்டுள்ளன. இம்மையத்தில் விண் ணப்பங்களை இலவச மாக பதிவேற்றம் செய்து தரப்படுகிறது.

தஞ்சா வூர் அரசு ஐடிஐ-யில் பெண்களுக்கு என தனி பிரிவுகளான டெக்னீசி யன் மெக்கட்ரானிக்ஸ், கணினி இயக்குபவர் ஆகிய தொழிற்பிரிவுக ளில் காலி இடங்கள் உள் ளன. பொதுபிரிவுகளில் இன்டீரியர் டிசைன் மற் றும் டெக்கரேசன், இன் டஸ்ட்டிரியல் பெயிண் டர், இன்ஸ்பெக்ஷன் வெல்டிங்,உலோகத்தகடு வேலையாள் போன்ற பிரிவுகளில் காலி இடங் கள் உள்ளன. எனவே, விண்ணப்பிக்க விரும்பு வோர் அசல் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான் றிதழ், சாதிசான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள போட்டோ ஆகியவற்று டன் ஐடிஐ சென்று நேர டிச்சேர்க்கை செய்துக் கொள்ளலாம். ஆண் விண்ணப்பதாரர்கள் 14 வயதுக்குமேலும் 40 வய துக்குமிகாமலும் இருக்க வேண்டும். பெண்களுக் கான குறைந்தபட்சவயது 14. உச்ச வயது வரம்பு இல்லை.

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற் பிரிவுகளில் சேர்வதற்கு 2021க்கு முன்பு தேர்ச்சி பெற்றவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மதிப் பெண் சான்றிதழ். 8ம் வகுப்பு தேர்ச்சி சான் றிதழ். 2021ல் தேர்ச்சிப் பெற்றவர்கள் 9ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்க ளையும் வைத்து விண் ணப்பிக்க வேண்டும்.

12ம் வகுப்புதேர்ச்சி, தோல்வி, பட்டப்படிப்பு இடையில் நின்றவர்களும் விண்ணபிக்கலாம். விண் ணப்பிக்க கட்டணம் ரூ.50ஐ ஏ.டி.எம். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் வாயி லாக செலுத்த வேண் டும். பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு விலை யில்லா மடிக்கணினி, IF வண்டி,சீருடை,காலணி, பாடப்புத்தகங்கள் வரை படக் கருவிகள், இலவச பஸ்பாஸ் ஆகியவை வழங்குவதுடன் மாதந் தோறும் ரூ.750 உதவித் தொகையும் வழங்கப்ப டும்.

இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews