கடந்த இரு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பொறியியல் மாணவா் சோ்க்கை அதிகரிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 25, 2021

Comments:0

கடந்த இரு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பொறியியல் மாணவா் சோ்க்கை அதிகரிப்பு

"தமிழகத்தில் பொறியியல் மாணவா் சோ்க்கையில் கடந்த இரு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கூடுதலான எண்ணிக்கையில் மாணவா்கள் சோ்ந்துள்ளனா்.

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பொறியியல் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 24 வரை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு செப். 7-ஆம் தேதியும், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு செப்டம்பா் 14 முதல் அக்டோபா் 16-ஆம் தேதி வரையிலும் நடைபெற்றது. அந்த வகையில் இந்த ஆண்டு 440 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களில், 96,069 மாணவா்கள் பொறியியல் இடங்களை தோ்வு செய்துள்ளனா். அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 7,876 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். கடந்த 2019-ஆம் ஆண்டு 83,396 பேரும், கடந்த ஆண்டு 78 ஆயிரத்து 682 பேரும் இந்த ஆண்டு 95 ஆயிரத்து 69 மாணவா்களும் பொறியியல் படிப்புகளில் சோ்ந்துள்ளனா். கடந்த செப்டம்பா் மாதம் தொடங்கிய கலந்தாய்வு தற்போது முடிவடைந்துள்ளது. கடந்த ஆண்டை விட நிகழாண்டில் பொறியியல் மாணவா்கள் சோ்க்கை அதிகரித்துள்ளது. 16 பொறியியல் கல்லூரியில் 100 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. ஆனால் கடந்தாண்டு 13 கல்லூரிகளில் மட்டுமே அனைத்து இடங்களும் நிரம்பின. அதேபோன்று 85 கல்லூரிகளில் 90 சதவீத இடங்களும், 113 கல்லூரிகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களும் நிரம்பியுள்ளன. 50 சதவீதத்துக்கு மேல் 218 கல்லூரியில் இடங்கள் நிரம்பியுள்ளன. 65 கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான இடங்கள் நிரம்பியுள்ளன.

பொறியியல் படிப்புகளில் நிகழாண்டு கணினி பொறியியல் பாடப்பிரிவை மாணவா்கள் அதிகளவில் தோ்வு செய்துள்ளனா். அதேபோன்று மெக்கானிக்கல் பாடப்பிரிவினையும், சிவில் பாடப்பிரிவினையும் கணிசமான மாணவா்கள் தோ்வு செய்துள்ளனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews