மூடிக் கிடக்கும் பள்ளிகள்... முடங்கிப் போன திறன்கள்! - பள்ளிகளைப் பற்றிய அவசரகால அறிக்கை வெளிப்படுத்தும் உண்மைகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 03, 2021

Comments:0

மூடிக் கிடக்கும் பள்ளிகள்... முடங்கிப் போன திறன்கள்! - பள்ளிகளைப் பற்றிய அவசரகால அறிக்கை வெளிப்படுத்தும் உண்மைகள்!

பள்ளிகளைப் பற்றிய அவசரகால அறிக்கை வெளிப்படுத்தும் உண்மைகள் ....

கொரோனா பெருந் தொற்று காரணமாக கடந்த 500 நாட்களுக் கும் மேலாக மூடப்பட்டுள்ள ஆரம்ப -நடு நிலைப் பள்ளிகளில் படிக்கும் குழந்தை களின் நிலை குறித்த மிகப்பெரிய சர்வே நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு ,கர்நாடகம், தில்லி, பீகார், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1400 குடும்பங்களைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருப்பது நீடிப்பதானது பேரழிவை ஏற் படுத்தியுள்ளது என இந்த சர்வே மூலம் தெரிய வந்துள்ளது. மிக நீண்டகாலமாக பள்ளிகள் மூடப் பட்டிருப்பதால், பள்ளிக் குழந்தைகள் வகுப்புகளில் பங்கேற்பதன் மூலம் கிடைக்கப்பெறும் முறையான கல்வி, பாது காப்பான சூழல், சத்துணவு மற்றும் ஆரோக்கியம், சமூக ரீதியான வாழ்க்கை அனைத்தையும் இழந்துள்ளனர். அரசுகள் ஆன்லைன் மற்றும் ஆஃப் லைன் மூலமாக குழந்தைகளுக்கு கல்வி அளித்ததாகக் கூறிக்கொண்டன. ஆனால் வசதியாக வீடுகளில் வாழும் மிகச் சிறு பான்மை குழந்தைகளுக்கு மட்டுமே இந்தக் கல்வி கிடைத்துள்ளது. மிகப்பெரிய எண் ணிடக்கையிலான குழந்தைகளின் கல்வி வளர்ச்சி தடுக்கப்பட்டுள்ளது. இந்த பேர ழிவு மேலும் மோசமாகாமல் தடுத்து நிறுத்த இதுவே தக்க தருணம்.

கற்றல் திறன் வீழ்ச்சி

கிராமப்புறங்களில், 28 % குழந்தைகள் மட்டுமே தொடர்ச்சியாக கற்று வருகின்ற னர்; 37% குழந்தைகளின் கற்றல் தொடர்பான பணிகள் முழுமையாக நின்று விட்டன. குழந்தைகளின் வாசித்தல்- எழுதுதல் திறன் மிகவும் மோசமாகிவிட்டது. அவர்க ளால் சில வார்த்தைகளுக்கு மேல் வாசிக்க முடியவில்லை. தொடர்ச்சியான பள்ளி ஊரடங்கின் காரணமாக குழந்தைகள் ஏற்கனவே கற்றுக் கொண்டதையும் இழந்து விட்டதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். நம்பிக்கை இழந்த நிலையில் உள்ள பெற்றோர்கள் பள்ளிகள் திறப்புக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆன்லைன் மூலம் நகர்ப்புறத்தில் 24%, ஊரகப் பகுதிகளில் 8 % குழந்தைகள் மட்டுமே கல்வி கற்கின்றனர். ஸ்மார்ட் போன் இல்லாதது, இணைய இணைப்பு கிடைக்காதது, நிதி ஆதாரமின்மை, கவனம் செலுத்தி படிக்க இயலாமை, புரிந்து கொள்வதில் சிரமம் போன்ற கார ணங்களால் ஆன்லைன் மூலமான கற் பித்தல் தோல்வி அடைந்துள்ளது. மிகச் சில பெற்றோர்களே தங்கள் குழந் தைகளின் ஆன்லைன் கல்வி பற்றி திருப்தி தெரிவித்தனர்.

வகுப்பறைக்கு ஈடாகாது?

ஆப்லைன் கல்வி தொடர்ச்சியாக நடை பெறவில்லை. உ.பி,அசாம், பீகார், ஜார்க் கண்ட் மாநிலங்களில் ஆஃப்லைன் கல்வி அறவே இல்லை. கர்நாடகம், மகா ராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்க ளில் சில முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால் எவையும் திருப்தி அளிப்பதாக இல்லை. கல்வி தொலைக்காட்சிகள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளன. வீட்டுப் பாடங்கள் இல்லை. கற்றல் திறனை மதிப் பிடுதல் இல்லை. ஏதோ சில தேர்வுகள், பயிற்சிகள் நடந்துள்ளன அவைகளில் தொ டர்ச்சியும் இல்லை; தெளிவும் இல்லை. குழந்தைகள் ஆசிரியர்களை அணு கவே முடியவில்லை. ஆசிரியர்களும் குழந் தைகளை சந்திக்கவே இல்லை. அக்கறை யும்,பொறுப்பும் மிக்க சில ஆசிரியர்க ளின் முன்முயற்சிகள் மிகவும் பாராட்டத் தக்கதாக இருந்தன. சில ஆசிரியர்கள் குழந்தைகளை குழுக்களாகப் பிரித்து திறந்தவெளி வகுப்பு நடத்தியுள்ளனர்; வீடு களுக்கே சென்று பாடம் நடத்தியுள்ளனர்; அவர்களின் ஸ்மார்ட் போனுக்கு ரீசார்ஜ் செய்துள்ளனர். ஆனால் இவையெல்லாம் அரசின் பாராமுக நிலைமையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. முழு மையான வகுப்பறைகளுக்கு ஈடாகாது. தனியார் பள்ளிகளில் இருந்து வெளியேற்றம்

ஊரடங்கு தொடக்கத்தின் போது, ஐந்தில் ஒரு பகுதி குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்துக்கொண்டிருந்தனர். பல தனியார் பள்ளிகள் உடனடியாக ஆன் லைன் கல்விக்கு மாறின. ஆன்லைன் மூல மான கல்விக்கும் முழு கல்விக் கட்டணம் வசூலித்தன. தொடர்ச்சியான ஊரடங்கு கார ணமாக நிதி ஆதார இழப்பால் பல பெற்றோர்கள் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. மேலும் பல குழந்தைக ளுக்கு ஆன்லைன் கல்வி சரியாகப் புரிய வில்லை. ஆய்வின்படி 27 சதவீத குழந்தை கள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு மாறியுள்ளனர். ஆனாலும் முழு கட்டணத்தை செலுத்திய பின்னரே தனியார் பள்ளிகள் மாற்றுச் சான்றிதழைக் கொடுத்தன.

மதிய உணவு நிறுத்தம்

சர்வே செய்யப்பட்ட அனைத்து மாநி லங்களிலும் உள்ள பள்ளிகள் ஊரடங்கில் மூடப்பட்டதோடு கூடவே மதிய உணவும் நிறுத்தப்பட்டுவிட்டது. முதல் மூன்று மாத காலத்திற்கு சமைக்கப்பட்ட உணவுக்கு பதிலாக அரிசி, கோதுமை வழங்கப் பட்டது. ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு 100 கிராம் உணவு தானியம் வழங்கப் படவேண்டும். ஆனால் இதுவும் முழுமை யாக வழங்கப்படவில்லை. பல்வேறு புகார்கள் எழுந்தன. குழந்தைகளின் வீடுக ளில் நேரடியாக உணவு தானியம் வழங்கும் திட்டம் ஏனோதானோவென்று செயல் படுத்தப்பட்டது.

வாசிப்புத் திறன்

பெரிய எழுத்துக்களில் மிகச்சிறிய வாக்கியத்தை கூட குழந்தைகளால் வாசிக்க முடியவில்லை. நகர்ப்புறங்களில் 3-5 வகுப்பு குழந்தைகள் சரி பாதிக்கு மேல் சில வார்த்தைகளுக்கு மேல் படிக்க முடிய வில்லை. முழுமையாக வாக்கியத்தை முடிக்க முடியவில்லை. ஆனால் கிராமப் புறங்களில் அதே வாக்கியத்தில் ஒரு வார்த்தையை கூட சரியாக வாசிக்க முடியவில்லை. 1-2 ஆம் வகுப்பு குழந்தைகளை ஆய்வு க்கு உட்படுத்தவேயில்லை. ஏனெனில், அவர்களால் எழுத்துக்களைக் கூட அடை யாளங்காண முடியவில்லை. ஆனால் இந்தக் குழந்தைகள்தான் அடுத்து மூன் றாம் வகுப்புக்கு செல்வார்கள் என்பதை கணக்கில் கொண்டால் நிலைமை எவ்வ ளவு மோசமாக உள்ளது என்பதை உணர லாம். 6-8 ஆம் வகுப்பு குழந்தைகளில் சரள மாக வாசிக்க முடிந்தோர் பாதிப்பேர் மட்டுமே. இவையாவும் ஊரடங்குக்கு முன்னரே குழந்தைகள் கற்றல் திறன் கவலைய ளிக்கும் நிலையில் இருந்துள்ளதை தெரி விக்கிறது. அதுவும் முன்பு கற்றவையும் ஊரடங்கு காலத்தில் மறந்தே போய் விட்டது. நகர்ப்புறத்தில், ஆன்லைன் மூலம் கற்ற குழந்தைகளிலும் கூட 65% பேரின் வாசிப்புத்திறன் கவலையளிக்கும் நிலை யில்தான் உள்ளது; 4% பெற்றோர் மட்டுமே தங்களின் குழந்தைகள் ஆன்லைன் கல்வி மூலம் இயல்பான கற்றல் திறன் பெற்றுள்ள தாக திருப்தி தெரிவித்தனர்.

எதிர்பார்க்கப்படும் கற்றல் திறன் இன்றி மேல் வகுப்புக்குச் செல்லும் குழந்தைகள்

வாசித்தல்-எழுதுதல் திறனில் மிகப் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலைமையில், இந்த காலத்திற்கு பின்னர் குழந்தைகள் மேல் வகுப்புகளுக்குச் செல்ல உள்ளனர். ஆனால் மேல் வகுப்பில் கனமான பாடத் திட்டம் உள்ளது. குழந்தைகளின் அறிதல் திறன் அதல பாதாளத்தில் உள்ள நிலை யில் சில மாநிலங்களில் பள்ளிக்குச் செல்லாத 2 ஆம் வகுப்பு குழந்தைகளின் கைகளில் ஆங்கிலப் புத்தகங்கள் தரப் பட்டுள்ளன. தற்போது 3 ஆம் வகுப்புக்குச் செல்லும் குழந்தைகளின் கற்றல் திறன் ஒன்றாம் வகுப்பு அளவிலேயே இருக்கும்.

மூன்று இடைவெளிகள் மலைக்க வைக்கும் மதில் சுவர்கள்

லைக்க வைக்கும் மதில் சுவர்கள் பள்ளிகள் திறக்கப்படும் போது, எல்லா குழந்தைகளும் மூன்று முறை அப்புறப் படுத்தப்பட்டு இருப்பார்கள். அந்த மூன்று இடைவெளிகள்; 1. ஊரடங்கு கால நீண்ட இடைவெளி. 2. ஊரடங்கு காலத்தில் எழுத்தறிவு மற்றும் அது தொடர்பான திறன்கள் இழப்பு. 3. மேல் வகுப்பில் மிரட்டும் பாடத்திட்ட அணிவகுப்பு. இந்த மிகப்பெரிய தொடர்பு துண்டிப்பை சரிப்படுத்த பாடத்திட்டத்திலும், கற்றல்- கற்பித்தல் முறைகளிலும் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்தாக வேண்டும். இந்த மாறுதல் காலகட்டம் சில மாதங்க ளுக்கு அல்ல; பல வருடங்களுக்கு நீட்டிக்க வேண்டியிருக்கும்.

அலைகடல் துரும்பாய் வளரிளம் பருவத்தினர்

தொடர்ச்சியான ஊரடங்கின் காரண மாக 10 - 14 வயதில் குழந்தைத் தொழிலா ளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பல குழந்தைகள் வீட்டு வேலைகளில் முடங்கிப் போய் விட்டனர். அவர்கள் சோம்ப லிலும் உடற்பயிற்சி இன்மையாலும் ,கைப் பேசிக்கு அடிமையாகும் போக்காலும் பாதிக்கப்பட்டுள்ளனர். சில பெற்றோர்கள் குழந்தைகளின் ஒழுங்கீனம் முரட்டுத் தனம், வன்முறை ஆகிய போக்குகள் பற்றி மிகவும் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக நகர்ப்புற பெற்றோர்களுக்கு குழந்தைகளை வீட்டிலேயே பெரும்பகுதி நேரம் வைத்திருப்பது சுமைமிக்கதாக மாறியுள்ளது. குழந்தைகள் வெளியில் சென்றாலும் அவர்களது நட்பு வட்டாரம் குறித்து கவலையடைந்துள்ளனர். இதைவிட, பெற்றோர் இருவருமே வேலைக்கு செல்லும் நிலையில் குடும்பங்க ளில் நிலைமை பேரிடராக மாறியுள்ளது. பள்ளிகளை திறப்பதற்கான பெற்றோர்களின் கூக்குரல்

ஆய்வில் பங்குபெற்ற பெற்றோர்களில் பெரும்பான்மையினர் விரைவிலேயே பள்ளிகளை திறக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். நகர்ப்புறங்களில் மட்டும், வெறும் 6% பெற்றோர் பள்ளி திறப்பில் தயக்கம் காட்டுகின்றனர். மிகச் சிலர் எதிர்ப்பு கூடத் தெரிவிக்கின்றனர்.ஆனால், ஊரகப் பகுதிகளில் 97% பெற் றோர் இப்போதே பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கூறுகின்றனர். “இப்போதே பள்ளிகளை திறக்க வேண்டுமா” என்று சர்வேயின் போது கேட்ட தற்கு” இந்தக் கேள்வியை கேட்பது அவசி யம்தானா” என்ற ஒரு தாய் கேட்டார். பள்ளிக்கூடங்கள் அத்தியாவசிய சேவைப் பணியாகும் . மூடப்பட வேண்டும் என்றால் பள்ளிகள் கடைசியாக மூடப்பட வேண்டும். ஆனால், முதலாவதாக திறக்கப் பட வேண்டும் என்பதே அறிவார்ந்த செய லாகும். இந்தியாவிலோ இதற்கு நேர் மாறாக நடந்து கொண்டிருக்கிறது. கண்ணை இமைப்பதற்குள் 2020 ஆரம் பத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. மூடப்பட்ட பள்ளிகள் இன்றுவரை மூடியே கிடக்கின்றன. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் ஆசிரியர்கள் உதவி மிகவும் தேவைப்படும் குழந்தைகளின் மீது கவனம் செலுத்தப்படுவதற்கு பதிலாக உயர்கல்வி மீதே கூடுதலாக கவனம் செலுத் தப்படுகிறது. ஆன்லைன்- ஆஃப்லைன் என்ற ஒட்டுத்துணி மூலம் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள கல்வி பேரிடர் யானையை மறைக்க முயற்சிக்கின்றனர். இது அநீதி யாகும். உலகின் நீண்ட இந்திய ஊரடங் கால் உருவாக்கப்பட்ட பாதிப்பை பற்றிய அறிகுறி இந்த சர்வேயில் தெரிய வந்துள்ளது. குழந்தைகளின் வாழ்க்கை நாசமாக்கப்பட்டுள்ளது.

இன்னும் விவாதப் பொருளாகவே உள்ள மீண்டும் பள்ளியை திறத்தல் என்பது முதல் பணி மட்டுமே. கட்டிட பராமரிப்பு, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஆசிரியர்கள் பயிற்சி, அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கு வரவழைத்தல் போன்ற முன் தயாரிப்புகள் கூட பல மாநிலங்களில் கண்ணுக்கு எட்டிய தூரம் தெரியவில்லை. பள்ளித் திறப்பிற்குப் பின்னர் சாத்திய மான, பகுத்தறிவுப் பூர்வமான பாடத் திட்டம் மூலம் குழந்தைகளை மீளுரு வாக்கம் செய்ய வேண்டியுள்ளது. இன்று தேவைப்படும் அவசர அவசிய மான பள்ளிக் கல்வி முறை கற்பனாசக்தி, சமூகமயம், சமத்துவம் ,சமூகநீதி போன்ற வைகளை கோரி நிற்கிறது.

வழி மறிக்கும் புதிய கல்விக் கொள்கை

ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை, 2020 அடிப்படையிலேயே பெரும்பான்மையான குழந்தைகளை கல்வி நிலையங்களை விட்டு விலக்கி வைப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள் ளது. அதன்படி 5 ஆம் வகுப்பு குழந்தை களுக்கு எண்ணறிவு- எழுத்தறிவு சோத னைக்கான அகில இந்திய தேர்வை கட்டாயமாக்கி உள்ளது. இதில் தேர்ச்சி யடைய தவறினால் குழந்தைகளின் கல்வி முடிந்துவிடும். புதிய கல்விக் கொள்கையின் படி முதல் எட்டு ஆண்டுகளிலேயே ஏராளமான குழந்தைகளின் கல்வி உரிமை பறி போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீண்டகால ஊரடங்குக்குப் பின்னர் பாதிப்புக்குள்ளாகி பள்ளிக்கு வரும் குழந்தைகளை புதிய கல்விக் கொள்கை கோட்டைச் சுவராக வழிமறித்து நிற்கிறது. மோடியின் புதிய கல்விக் கொள்கை ஆன்லைன்- ஆஃப்லைன் மூலம் கல்வி போதிப்பதில் மிகவும் ஆர்வத்துடன் உள்ளது. சமத்துவமற்ற கல்வி முறை குழந்தைப் பருவத்தில் நீண்டகால பாதிப்பை ஏற் படுத்தும். பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள நிச்சயமற்ற தன்மையால் குழந்தைகளின் மன அழுத்தம் ,கவலை, அச்சம் கடுமை யாக அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஊரடங்கு காலத்தில் மிகப் பெரும்பாலான குழந்தைகளின் பங்கேற்பு இல்லாமலேயே ஆன்லைன் திருவிழாக்கள் தொடர்ந்தன.

சலுகையல்ல, பிறப்புரிமை

கல்வி என்பது சலுகை அல்ல. அது பிறப்புரிமை. சுதந்திர இந்தியாவில் எழுத்த றிவின்மையை போக்க கடந்த 70 ஆண்டு களாக போராடிக் கொண்டிருக்கும் நிலை யில், சமுதாயப் படிநிலையில் அடிமட் டத்தில் உள்ள மக்களின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்று உத்தரவிட்ட வரலாற்றுச் சுமை கொண்ட நாட்டில், மீண்டும் அதே ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட அழைப்பு விடுக்கிறது புதிய கல்விக் கொள்கை. 35 கோடி பேர் இணையவசதி கிடைக்கப் பெறாத நாட்டில் டிஜிட்டல் கல்வி முறைக்கு மாறுகிறோம் என்பது சாத்தியமற்றது. இது தேவதைகள் நடமாட அஞ்சும் பாதை யில், நாம் படுவேகமாக பயணிக்கிறோம் என்று அர்த்தமாகும். இந்தியா டிஜிட்டல் கற்பனா தேசத்திற்கு மாறுவதற்கான காலம் இன்னும் கனியவில்லை.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews